உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

75

சிவபுராணப் பழமை (திருவாசகம்) சுட்டும் ஆசிரியர், உயிர், மெய்யுணர்வுற்று வீடு பேறு எய்தும் தத்துவ விளக்கமாக அஃதிலங்குதலைக் குறிக்கிறார்.

தாம் எழுதும் புராணங்களுக்கெல்லாம் வடமொழி மூலம் காட்டும் தப்பு வழக்கம் இருந்ததை எடுத்துக் காட்டும் தமிழ்க் கா. சு., "குறைபாடு யாதும் இல்லாததாய் இறைவன் பால் அன்பு செலுத்தி வீடெய்திய தமிழ் நாட்டு மெய்த் தொண்டர் வரலாறுகளைத் தொகுத்துப் பெருங்காப்பிய நயங்களோடு செவ்விதிற் கூறும் புராணம் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் ஒன்றேயாகும்" என்கிறார் (5). “இது போன்ற வேறு புராணம் வடமொழியிலும் தென்மொழியிலும் இல்லை என்றே கூறலாம்” என்றும் கூறுகிறார் (6). பெரிய புராணம் இயற்றப் பட்ட காலம் முதற்குலோத்துங்க சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டு என்கிறார்.

தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்தைச் சார்ந்த குன்றை வள நாட்டுக் குன்றத்தூரிலே சேக்கிழார் என்னும் வேளாண் திரு மரபில் சேக்கிழாரும், அவர் தம்பியார் பாலறாவாயரும் தோன்றியதும், சோழமன்னனால் போற்றப் பெற்று உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டம் வழங்கப் பட்டதும், சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்தின் மேல் கொண்ட பற்றால், தம் ஊரில் திருநாகேச்சுரத்தின் அமைப்பில் திருக்கோயில் எடுத்ததும் ஆகியவற்றைச் சேக்கிழார் நாயனார் வரலாறு என்னும் பகுதியில் கூறுகிறார் (9-11).

வேளாளர் நிலத்தை ஆள்பவர் (வேள்-மண், நிலம்); கடவுள் வழிபாட்டிற்கு வேளாளருள் பிரிந்த ஒரு பகுதியாரே பார்ப்பனர்; அவரே இக்காலத்து ஆதிசைவர்; நிலமுடையாருள் இடம் - பொருள் ஏவலாட்சியில் சிறந்து குறுநில மன்னராய் மேம்பட்டவர் வேளிர்; வேளாண் தலைவர் பலர்க்கும் ஒரு தலைவனான ஆற்றலாளன் மன்னன்; தொடக்கத்தில் ஒரு வேந்தனும் பின்னர் மூவேந்தரும் ஏற்பட்டமையால் சேர, சோழ, பாண்டிய நாடுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இம்மூவேந்தரும் வேளிருடன் பெண் கொள்ளல் - கொடுத்தல் முதலியன செய்து வந்தனர். வேளாளப் பெருஞ்செல்வர்க்கு இளங்கோ என்னும் பெயரும், மன்னர் பின்னோர் என்னும் கருத்தும் உண்டு; வேளாளர்க்கு வணிகமுமுண்டு; வேளாளரை வைசியர் என்னும் வழக்கம் உண்டு; உழுது பண்ணும் தொழிலையே சிறப்பாக

·