உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

உடைய வேளாளர், தொழு துண்ணும் தொழிலையே சிறப்பாகவுடைய சூத்திரர் ஆகார்; சேக்கிழார் பெற்றோர் பெயர்களைப் புராணத்துட் கண்டிலம்; சேக்கிழார் சுவாமிகள் சரித்திரத்தில் (கலியாண சுந்தரயதீந்திரர்) சேக்கிழார் தந்தையார் வெள்ளியங்கிரி முதலியார் என்றும், தாயார் அழகாம்பிகை என்றும் கூறுவதற்குச் சான்று அறிந்திலம் எனப் செய்திகளை “வேளாளர் ஆராய்ச்சிப்” பகுதியில் விளக்குகிறார்

(12-48).

பல

பெரிய புராணத் தோற்றம் திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றின் வழியதே என்பதைத் திருமலைச் சிறப்பு 38, 39 ஆம் பாடல்களைக் கொண்டு தெளி விக்கும் கா. சு., அகத்திய பக்த விலாசமாவது, உபமன்ய கா.சு. பக்த விலாசமாவது முதனூலன்று என்று மறுத்ததுடன், பெரிய புராணத்தின் மொழி பெயர்ப்பே அவை என்பதை

வலியுறுத்துகிறார்.

"சேக்கிழாரும் பெரிய புராணமும்" என்னும் பகுதியில், நாயன்மார்களுள் மரபறிந்தார், ஊரறிந்தார், பேரறிந்தார், முத்தியடைந்த வகை, முத்தமிழ் வல்லார், இல்லறத்தார், துறவறத்தார் என்றெல்லாம் சேக்கிழார் புராணத்து வரும் செய்திகளை அடைவாக்கிக் கூறுகிறார். சிவனடியார் எக் குலத்தினும் இருப்பர் என்றும், சிவநெறி பொதுமையது என்றும் இவ்வடைவு கொண்டு தெளிவாக்குகிறார். இத்தொகை பற்றி விரிந்த ஆய்வும் செய்கிறார்.

உமாபதி சிவாசாரியார், பெரிய புராணத் தொகை 4253 என்று குறித்தாராகவும், இந்நாளில் 4286 பாடல்கள் அதில் இருப்பதை எண்ணும் கா. சு., திருமலைச் சிறப்பு கண்ணப்ப நாயனார் ஆகியவற்றில் வெள்ளியம்பலத் தம்பிரான் முதலிய பிற்காலத்துப் புலவர்கள் தம்முடைய பாடல்களைச் செருகின மையைச் சுட்டுகிறார்.

அடியார் பெருமை பகரக் கருதிய சேக்கிழார், தமது அமைச்சு வேடத்தைத் துறந்து அடியார் திருவேடத்தையே கொண்டனராகத் தெரிகிறது. தலையை முண்டிதஞ் செய்து முக்குறியிட்டு முழுநீறு பூசிக் காதிரண்டினும் குண்டலங்களும் ஓங்கார வடிவான குழையும் அணிந்து சென்னியினும் கழுத் தினும் கையினும் கண்மணி மாலையணிந்து விளங்கினமையால், அரசன் அவரது தவ வேடத்தினைக் கண்டவுடன் தன்னையறியாத கைகள் தலைமிசை ஏறப்பெற்றான். “சேக்கிழார் பெருமானால்