உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

77

சிவ சமயப் பெருமையையும், சிவனடியார் பெருமையையும் அரசன் உணர்ந்தானாதலின் அவரைத் தமது ஞான ஆசிரியராகக் கருதி அவரது திருவடிகளை வணங்கினான் என்கிறார். அரங்கேற்றச் சிறப்பையும், ஊர்வலச் சிறப்பையும் புராணத்துக் கண்டவாறு விரித்துரைத்து ஆய்கின்றார்.

திருத்தொண்டர் புராணம் தில்லைப் பெருமான்

அடியெடுத்துக் கொடுத்த வண்ணமே 'உலகெலாம்' என்று தொடங்கித் திருவருள் துணை கொண்டு பாடப் பெற்று, ‘உலகெலாம்' என்று முடிந்தமையால் அதனை இறைவரது திரு வடிவம் என்றே யாவரும் கருதினராதலின் சிவபெருமானுக்குச் செய்யும் வழிபாடனைத்தும் அப்பெரிய புராணத் திரு முறைக்கும் செய்யப்பட்டது என்கிறார். து

திருவருள் பெற்றபின் மணிவாசகனாரைப் போலச் சேக்கிழார் பெருமானும் அமைச்சர் வேலையை மேற்கொள்ளக் கருதிற்றிலர். ஆதலின், சோழ மன்னன் அவருடைய இளவலாகிய பாலறாவாயர்க்கு அமைச்சுரிமையளித்தனன் என்ற வரலாற்றுத் தகவையுரைக்கிறார்.

'பெரிய

புராணம்

விரிவுடையதாகும்.

66

ஆராய்ச்சி’ என்னும் பகுதி

உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி” என்பது போன்ற வேற்றுமைநயம்,

“தலைமிசை வைத்து வாழும் தலைமை நந் தலைமையாகும்

என்பது போன்ற ஒற்றுமை நயம்,

"வேதியர்போற் கடிகமழும், தாமரையும் புல்லிதழும் தயங்கி நூலும் தாங்கி” என்பது போன்ற சிலேடை,

"பேர் பரவை பெண்மையினிற் பெரும்பரவை"

என்பது போன்ற ஒரு சொல்லைப் பன்முறை ஒரு செய்யுளில் வைத்தல், ஆகிய இன்ன நயங்களை எடுத்துரைக்கிறார்.

எழுகூற்றிருக்கை போலும் அமைப்பு உண்மை, தமது நாவினால் சொல்வதற்குத் துணியாத கொடுஞ் செய்திகளை டர் விளையாத சொற்களால் சொல்லுதல், சில சொற் றொடர்களை இருபொருள் பயக்கும் வண்ணம் அமைத்துச் சொல்லுவோர்க்கு ஒரு பொருளும் கேட்போர்க்கு ஒரு பொருளும் தோற்றுவித்து நகை விளைத்தல். (பழைய மன்றாடி),