உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

சொல்லாற்றலினாலே நுட்பமான பொருளைக் குறித்தல் (சிந்தையால் தொழுது சொன்னான், செல்கதிக் கணியனானான்). பின்வரும் செய்திக்குத் தோற்றுவாயாக முன்னரே குறிப்பு மொழியமைத்து உசாவுணர்ச்சி எழுப்புதல் (பிழைக்கு நெறி தமக்குதவப் பெண் கொடியைப் பெற்றெடுத்தார்) என்ப வற்றை எடுத்துரைத்துக் காவிய நயந்துய்க்கச் செய்கிறார்.

பெரிய புராணத்துக் காணும் உவமைகளைப் பகுத்துப் பல திறமாக ஆய்கிறார். உவமை, எதிர்மறை உவமை, இயற்கை உவமை, கடவுள் நெறிச் சார்பான உவமை, மெய்ப்பொருள் உவமை என்பவை சில. அவற்றுட் சில:

“வெங்கட் புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும் பைங்கட் குறுநரியே போல்வான்

“கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன

மன்னு வான்மிசை வானவிற் போலுமால்

- ஏனாதி 10

- திருநாட்டுச் 19

“பூசு நீறு போல் உள்ளம் புனிதர்கள்

திருக்கூட்டம் 6

“குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க’

66

இளையான்

பெரிய புராணத்துள் திருக்குறளாட்சி பெற்றுள்ள

வகைகளையும் ஆய்கிறார் கா. சு.

“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றமர்ந்திருந்தார் காதலினால்”

66

'ஏதிலார் போல நோக்கி"

ஏயர்கோன் 267

திருநீல 7

குற்றமாகத் தோன்றுவனவற்றைக் குற்றமற்ற என விலக்குதற் பொருட்டு அழகிய உவமைகள் அமைப்பதில் திறத்தர் சேக்கிழார் என்பதை,

66

வாயின்மஞ் சனநீர் தன்னை,

விளைத்த அன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்”

என்பது போன்றவற்றால் சுட்டுகிறார்.

மூவர் திருப் பதிகங்கள் பாடிய செய்தியைக் கூறுமிடத்துச் சில இடங்களில் திருப் பதிக முதற்குறிப்பையும், சில இடங்களில்