உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

79

முடிபினையும் விளக்கியும், சில இடங்களில் இரண்டினையும் அமைத்தும், திருப் பதிகக் கருத்தினைச் சில இடங்களில் விளக்கி இடை நின்ற சொற்றொடர்கள் அமைத்தும், பிற இடங்களில் திருப் பதிகக் கருத்தினை விளக்கியும் சேக்கிழார் திருப்பதிகங்கட்குத் தோற்றுவாய் அமைத்தமையைச்

சான்றுகளுடன் விளக்குகிறார்.

தேவாரச் சொல்லாட்சிகள், செந்தமிழ்ப் பெருமை, ஒன்பான் சுவைக்குரிய மெய்ப்பாட்டு நிலைகள், குடும்பத்துடன் திருத்தொண்டில் ஈடுபட்டோர் சிறப்பியல், அநபாய சோழன் பெருமை, மகளிர் முடிமுதல் அடியீறாகிய வண்ணனை நயம், ஆடவர் வீரச் சிறப்பு, இயற்கை எழில், ஐந்திணை வளம் ன்னவற்றை யெல்லாம் தனித் தனியே ஆய்ந்துரைக்கிறார். இவற்றுள் சில குறிப்புகள்.

66

'தருஞாலம் அளந்த மேன்மைத், தெய்வத் தமிழ் "தலைச்சங்கப் புலவனார் தம்முன்"

“காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்துமேல் கதுவ

“வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி விழ”

66

'அன்புறு புணர்ச்சி தன்மை அயலறி யாமை வாழ்ந்தார்

- மூர்த்தி 3 திருஞான 662

எறிபத்தர் 24

கண்ணப்ப 170

- திருநீல 8

அம்புய மலராள் மார்பன் அநபாயன் என்னும் சீர்த்திச் செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்த தன்றே தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்'

“கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகங்காட்ட மருங்குவளைக் கதிர்ச் செந்நெல் வயப்புரவி முகங்காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட வினைஓரார்ப் பொலி பிறங்க நெருங்கியச துரங்கபல நிகர்ப்பனவாம் நிறைமருதம்'

மனநிதி 8

சய்வார்க்குப் பயன்

பெரிய புராணப் பாவிக ஆய்வு செய்வார்க்குப் மிக்க வழிகாட்டியாகவும், வரைபடம் போலவும் இப்பகுதி அமைகின்றது.