உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்கண்டாரும் சிவஞான போதமும்

இந்நூல் மணிவாசக மணிவாசக மன்ற வெளியீடாக 1932 இல் (ஆங்கீரச ஐப்பசி) வெளி வந்தது. திருவெண்ணெய் நல்லூர், மெய்கண்டார் அருளிய சிவஞான போத ஆய்வு நூல் வெளியீட்டுக்கு அவ் வெண்ணெய் நல்லூரினரும் சித்தாந்தப் பேரவை நடாத்தியவருமாகிய சின்னசாமி என்பார் பொருளுதவி புரிந்து உரிமையுரை யேற்றுள்ளார்.

“சின்னசாமி சிரேட்டப் பெயரார்க்குப் பதியியை பானும் பல்லாற் றானும் இந்நூல் பெரிதும் ஏற்புடைத் தாமே'

என்பது உரிமையுரைப் பாடலின் இறுதி மூன்றடிகள்.

சவ

முன்னுரையில் நூல் இயலுமாற்றை விளக்குகிறார். “இச் சிறு நூலானது. மெய்கண்ட தேவநாயனாரது வரலாற்றினை ஆராய்ச்சி முறையாக இயம்புகின்றது. சிவஞான போதம் தமிழிலே முதல் நூலாக அமைந்திருப்பதற்குரிய காரணங்கள் இதனுள் தொகுத்துரைக்கப் பட்டுள்ளன. சிவஞான போதத்திற்கு ஒப்பற்ற பேருரையாக விளங்குஞ் சிவஞான பாடியத்தின் சாரமானது சுருக்கமாக இதனுள் விளக்கப்பட்டிருக்கிறது. சிவ சி ஞான போதத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரத்திற்கும், அதன் கருத்திற்கும் அதன் அதிகரணங்களிலுள்ள வாக்கியம் ஏது உதாரணச் செய்யுள் என்பவற்றிற்குந் தெளிவான பொழிப்புரையும், குறிப்புரையும் சிவஞான போதம் தோன்றிய திருவெண்ணெய் நல்லூரின் சிறப்பும் சேர்க்கப்பட்டுள்ளன” என்பது அது.

கல்

நூலின் முகப்பிலேயே திருவெண்ணெய்நல்லூரின் பெருமை, திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திலுள்ள வெட்டுகள், திருவெண்ணெய்நல்லூர்த் திருப்புகழ், திரு வெண்ணெய்க் கலம்பகம், மெய்கண்ட தேவர் கல்வெட்டும் காலமும் என்பன இடம் பெற்றுள்ள திருவெண்ணெய் நல்லூரின் பெருமை, திரு. தி. கு. கி. நாராயணசாமி நாயுடு அவர்களுதவிய குறிப்பைக் கொண்டு திரு. ம. பாலசுப்பிர மணிய முதலியாரால் எழுதப்பட்டது என்னும் குறிப்புள்ளது.