உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

81

மெய்கண்டார் வரலாறு பத்துப் பக்கங்களால் இயல்கின்றது. திருமுனைப்பாடி நாட்டுத் திருப்பெண்ணாகடத்து அச்சுத களப்பாளர் மைந்தராக மெய்கண்டார். தோன்றியதும், அவருக்கு சுவேதவனப் பெருமாள் என்று பிள்ளைப் பெயர் டப்பட்டதும், பரஞ்சோதியார் தம் குருவராகிய சத்திய ஞான தரிசனிகளின் பெயரையே மெய்கண்டார் எனச் சூட்டி

யழைத்ததும், சிவஞான போதம் இயற்றியதும் ஆகிய செய்திகளைத் தொகுத்துரைக்கிறார்.

'சிவஞான போதம் தமிழ் நூலே' என்பதை ஒவ்வொரு நூற்பாவாக எடுத்துக்கொண்டு நிறுவுகிறார். இவ்வாய்வு 17 பக்கங்களில் நடக்கின்றது. தமிழ்ச் சிவஞான போத முதற் சூத்திரத்தையும் வடமொழிச் சிவஞான போத முதற் சூத்திரத்தையும் ஒத்துப் பார்ப்பின், தமிழ்ச் சூத்திரத்தின் பொருளைச் செவ்விதற்றெரிக்கும் ஆற்றல் வடமொழிச் சூத்திரத்திற்கில்லை என்பது புலனாகும் என்கிறார். உலகம் ஒடுங்கும் என்பதற்கும், உயிர்களுக்கு ஆணவமல பரியாகத்தின் பொருட்டு மீளவும் அது தோன்றும் என்பதற்கும் 'மலத்துளதாம்' என்ற ஒரு சொற்றொடர் அமைத்த திறமை ஆசிரியர் ஆ மெய்கண்டார்க்கே உரியது என்கிறார். மெய்கண்டாரது நூலை மொழி பெயர்ப்பு என்பது போப்பையர் திருவாசக மொழி பெயர்ப்பைக் கொண்டு மாணிக்க வாசகர் திருவாசகத்தைத் தமிழாக்கம் செய்தார் என்பது போன்றதாம் என்று முடிக்கிறார்.

“ஏவம் வித்யாத் சிவஞான போதே சைவார்த்த நிர்ணயம்’ என்னும் வடமொழிச் சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் நூற்பாவின் தொடர்க்குத் தமிழ்ச் சிவஞான போதத்தில் மொழி பெயர்ப்பு இல்லாமை ஒன்றே அது மொழி பெயர்ப்பு நூலன்று; முதல் நூல் என்பதைத் தெளிவிக்கும் என்கிறார். அன்றியும், அதுவே வடமொழி நூல் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பதன் சான்றுமாம் என்பதைத் தேர்ந்துரைக்கிறார்.

சிவஞான போதத்தையும் சிவஞான சித்தியாரையும் கொண்டு சிவப்பிரகாசம் எழுந்தமையை அதன் பதினொன்றாம் பாட்டால் உறுதிப்படுத்தும் ஆசிரியர், சிவாக்கிர யோகிகள் காலந்தொட்டே சிவஞான போதம் மொழி பெயர்ப்பென்ற பொய்க் கொள்கை உண்டாயிற்றென்றும் கூறுகிறார்.

அடுத்துச் சிவஞான போத மூலத்தை அமைத்து, சிவ ஞான பாடியத்தின் சாரத்தை விரித்தெழுதுகிறார் (30-94).