உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

83

குடைவமைந்த பொருள் குடை எனப்படும். குடைதல் தொழில் பழமையானது. குடைவரை கோயில்கள் அதற்குச் சான்று. இந்நாளில் தொடரிசெல்வதற்குத் தக்கவாறு,

குை

குடைவுகள் மலைகளில் உண்டாக்கப்படுகின்றன.

கோலார் தங்கவயல் வளம் 'குடைவு வளமே'. சுற்றிச் சுற்றி நீரில் நீந்தியாடுதல் குடைதல் எனப்படும். குடைவு என்பதும் கவிவு என்பதும் ஒரு பொருளதாதல் அறிக.

குடைதல் வளைவு வட்டம் ஆகிய பொருள்களைத் தருத லால், நடுவுயர்ந்து சூழவும் தாழ்ந்து வளைந்துள்ள குடைக்குக் கவிகை என்பது பெயராயிற்று.

"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

என்றார் திருவள்ளுவர். அதிவீரராமபாண்டியன் அரண்மனை யில் குடைபிடிக்கும் ஏவலரும் பாவலராகத் திகழ்ந்தனராம். அதனால் “கவிகை ஏந்தியவரும் கவிகையேந்தினர்” என்றொரு வழக்கு மொழி எழுந்தது.

கவித்தல் என்பது வட்டவடிவப் பொருளின் வாய்ப்புறம் தலைகீழாக வைத்தலாகும். முடிசூட்டுதலும் கவித்தலேயாம். அது முடிகவித்தல் எனப்படும். இருகை விரல்களையும் மூடி வைத்தலை ‘இருகையும் கவிந்தமாக்கி' என்னும் கந்தபுராணம் (காவிரி. 40). ‘கவித்தம்' என்பது கூத்தின் கை வகையுள் ஒன்றுமாம்.

கவிப்பு என்பதும் தலையில் கவிக்கும் முடியைக் குறிக்கும் குடையைக் குறித்தலும் உண்டு. வணிகர் பெற்ற சிறப்புப் பட்டங்களுள் ‘கவிப்பர்' என்பது ஒன்று. அரசரால் ஒருவகை முடி கவிக்கப்பட்ட சிறப்பால் பெற்ற பெயர் அதுவாகும்.

கொடுக்கும் கை கவிதல் கண்கூடு. அது வானம் கவிந்து பொழிவது போல்வது ஆதலால் கொடைக் கையை வானம் வழங்குதலோடு ஒப்பிட்டுக் “காரினை வென்ற கவி கையான் என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை (9:29)

கவிச்சி அல்லது கவிழ்ச்சி என்பது சுற்றிச் சுற்றி அல்லது சுழன்று சுழன்று ஓரிடத்து அல்லது ஒரு பொருளில் அடிக்கும் நாற்றத்தைக் குறிக்கும். இதனைக் கவிச்சியடித்தல் எனப் பல வடிவுகளில் வழங்குகின்றனர்.