உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இவற்றை நோக்கக் ‘கவி' என்னும் சொல்லின் வடிவும் பொருளும் தெளிவாம். அது வளர்ந்து பல சொல்லாய் விரிந்த நிலையும் விளங்கும். ஆகவே குரங்கைக் குறிக்கும் ‘கவி' என்னும் சொல் தமிழ்ச் சொல்லே என்பதும், அது ‘கபி' என்னும் வடசொல் வழிவந்ததன்று என்பதும் வெளிப்படையாம்.

இனிக் ‘கவிதை' என்பது எம்மொழிச் சொல் எனின் ‘கவி’ என்பதன் வழியே கிளர்ந்த சொற்கள் காலந்தோறும் வளர்ந்து பெருகிய வளர்ச்சியில் பிற்காலத்தோரால் அமைத்துக் கொள்ளப்பட்டது. 'கவி' ‘கவிதை’, ‘கவிஞர்' என்பவை என்க. கவி, கவிதை; ஒப்புநோக்குக; பழு. பழுதை.

செய்யுள், பாட்டு, பா, யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் இன்னவை பழைய ஆட்சியுடையவை. அத்தகு பழமையாட்சி யின்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய தமிழ்வழிப் புத்தாக்கச்சொல் ‘கவிதை’ முதலியனவாம். கற்பார் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு கவியச் செய்யும் சொல்லும் பொருளும் வாய்ந்தது கவிதை.

-

தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம், என்றார் கம்பர்! 'கவிப்பா அமுதம்' என்றார் பாவேந்தர்! இவை கவித்து - கவர்ந்து - இன்பஞ் செய்தலைக் குறிப்பவை.