உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

22. கழிசடை

66

66

கழிசடை' என்பது வசைச் சொல்லாக வழங்குகிறது. அவன்(ள்) ஒரு கழிசடை”; கழிசடைப் பயல்” அந்தக் கழிசடையை ஏன் பேசுகிறாய்" இப்படிக் கேட்கும் செய்திகள் நாளும் உண்டு.

கழிதல், அகலுதல் பொருளது; வழிதல், வழிந்தோடுதல் என்பனவும் அவ்வழிப் பொருளவே. கழிச்சல் நோய் (பேதி) என ஒரு நோயே உண்டு. 'வயிற்றுப் போக்கு' என்பது அதன் பொருளைக் காட்டும். 'கக்கல் கழிச்சல்' என்பவை (வாந்தி, பேதி) சேர்ந்திருந்தால் என்னாம்?

கால் கழிகட்டில்' என்பது இறந்தோரைக் கிடத்தும் காலில்லாக் கட்டிலாம் (பாடை). இவண் கழிதல் இன்மையைக் குறித்தது. “கழிந்தது பொழுது” என்பதில் பொழுது முடிந்து போனதைச் சுட்டிற்று. 'பொழுதைக் கழிக்கிறான்” என்பது வேலையில்லாது நாளைக் கழித்தலைக் குறித்தது.

'கழிவாய்' 'கழிமுகம்’ ‘உப்பங்கழி' என்பவை கடல் சார்ந்தவை. நிலத்திட்டுக் கழிந்த நீர்ப்பகுதி கழிவாய் எனப் பட்டது. அக்கழியில் படகு வந்து செல்லும்துறை கழிமுகம். உப்பு எடுப்பதற்காகப் பயன்படுத்தும் நீர்ப்பகுதி உப்பங்கழி.

‘கழிகலன்மகடூஉ' என்பது முந்தையோர் உரை; “கலன் கழி மகளிர்” என்பதும் அப்பொருளதே, கணவனை இழந்த கைம்மை மகளிர் மங்கல அணியைக் கழைதல் வழியாக வந்த பெயர் இது. கழித்துக் கட்டுதல்' என்பது தீர்த்துக் கட்டுதல்.

கருச்சிதைவைக் ‘கழிப்பு' என்பது சிற்றூர் வழக்கு. கருக் கலைப்பு, கருச்சிதைப்பு, கருவழிப்பு இவற்றிலெல்லாம். 'கரு உண்டு. ‘கழிப்பு' என்றாலே கருக்கலைப்பைக் குறிக்கும் சொல்லாக வழங்குகின்றது. அதனைச் செய்தலில் தேர்ந்தவள் கழிப்புக்காரி' எனப்படுகிறாள். அக்கழிப்பைக் கொண்டு செய்வினை முதலாகச் சொல்லப்படும் தீவினை செய்பவன் 'கழிவினையாளன்' எனப்படுகிறான். கண்ணேறு கழித்தலும்