உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

15

கழிப்பே. அதற்கு வெள்ளிக்கிழமைகளில் வற்றல் உப்புப்போட்டு எரியூட்டுக் கழிப்புச் செய்தல் வழக்கு.

'கண்டதைக் கழியதைத் தின்னாதே' என்னும் வழக்கை எவர் அறியார்? கண்டது, பார்த்த பொருள்; கழியது உடலுக்கு ஆகாது, ஒவ்வாது என விலக்கப்பட்ட பொருள். சிலர் வாயடக்கம், மனவடக்கம் கொள்ளாமல் தின்று கெடுவதைத் தடுக்கும் கட்டளை இது.

66

கழிவுப்பஞ்சும் காசாதல் தெரியுமே! கழிவு வைக்கோல் தாளும், கூரைத் தகடும் ஆக அறிவியல் வளம் உதவுகிறதே! கழிப்பறை' நகரத்தில் காணப்படுமே! 'கட்டணக் கழிப்பறை’ கொடி கட்டிப் பறக்கும் காட்சியைப் பட்டணங்களில் எவர் அறியார்? வேண்டாப் பொருள்களைப் போட்டு வைக்க வீடுகளில் ‘கழிவறை' யுண்டு; செல்வர்கள் வீட்டுக் கழிவறைகளில் பல சிறு குடும்பங்களே வாழலாம்!

நால்வகைக் கணக்கிலே கழித்தல் இல்லையா? கூட்டிக் கழிக்கத் தெரியாதவர்பாடு கணக்கில் என்னபாடு? கூட்டிக் கழிக்கத் தெரியாத ஒருவர், வீட்டு வேலையாளாகக் காலந்தள்ள முடியாதே!

கழீஇ, கழுவி, கழூஉ என்பன என்பனவெல்லாம் அகற்றுதல், அப்பால் படுத்துதல், போக்குதல் என்னும் பொருளவே: எத்தனை பேர்கள் என்னென்ன வகைக்கெல்லாம் ‘கைகழுவிய'தாகச் சொல்கிறார்கள்? 'கழுவாய்' தேட வேண்டும் என்ற எண்ணங் கூடப் பலர்க்கு வருவதில்லையே! மாசுபோக்கி மணியாக்குதல் மணி ‘கழுவுதல்' என்றே வழங்கும். 'கழூஉமணி' என்பது இலக்கண இலக்கிய ஆட்சிகள்.

‘கழிசடை’ என்பதைக் காண்போம். ஒருவரைக் கழிசடை என்றால் எவ்வளவு சினம் உண்டாகிறது? சினம் மட்டுமா? எப்படிச் சீறுகிறார்? 'சாய்க்கடை' என்றால் எப்படி அரு வறுப்பாகக் கருதுவாரோ அப்படியன்றோ கழிசடை என்றாலும் கருதுகிறார்!

கழிசடை' என்பது என்ன? தலை சீவுகிறோம். சீவும் போது மயிர் சீப்புடன் வருகிறது: உதிர்கிறது; சிலர் சீவாத போதும் மயிர்தானே உதிர்ந்து கொட்டுதல் அறிந்ததே; அந்த மயிரை என்ன மதிப்பு மதிக்கிறோம்; அது தலையில் இருந்த போது எவ்வளவு மதிப்பு அதற்கு? எத்தனை எத்தனை எண்ணெய் - மணம் - சீவுதல் - அழகுறுத்தல்! எத்தனை முறை கண்ணாடியில்