உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

87

தன்னைத் தானே பார்த்துக் களித்தல்! எல்லாம் என்ன ஆயின? உதிர்ந்த மயிர் உடலிலோ உடையிலோ ஒட்டியிருப்பின் அருவறுப்பாய்த் 'தொடாமல் தொட்டெடுத்து' ஊதித்தள்ளு கிறோம். இல்லையேல் விரலால் சுண்டி கீழே வீழ்த்துகிறோம். கையையும் கழுவுகிறோம். இந்த மாற்றம் ஏன்? அதன் நிலை மாற்றமே இம்மதிப்பு மாற்றத்திற்கு அடிப்படை. இதனைத் தெளிவாகத் தெரிந்த திருவள்ளுவர் கற்பவர் நெஞ்சில் படுமாறு, “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை'

99

என்றார். அவர் இதற்கு எதிரிடையையும் எண்ணினார். நிலையில் திரியாதவர் அவர்: அதனால்,

"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” என்றார்.

திருவள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்தவரோ தெரியாதவரோ ஒருவர் ‘கழிசடை' என்றார். சடை என்பது தலை முடி; அதன் கற்றை; அதன் பின்னல்; அதில் இருந்து கழிந்த மயிர்க்கு என்ன பெயர்? 'கழிசடை' சடையில் இருந்து கழிந்த மயிர் ‘கழிசடை’ இலைநுனி நுனியிலையாக வில்லையா? இல்வாய், வாயில் ஆகவில்லையா? 'சடைகழி' கழிசடை ஆயிற்று. இலக்கணம் தெரிந்தவர் இதனை இலக்கணப் போலி என்பர். எவரும் என்ன இலக்கணமும் சொல்லிக் கொள்ளுங்கள்; எங்களுக்குக் கவலையில்லை என்று பொது மக்கள் சொற்களைப் படைத்து விட்டு விடுகிறார்கள். அவர்கள் படைத்த சொல்லுக்கு விளக்கம் இயல்பாய் இனிமையாய் அதேபொழுதில் அருமையாய் இருக்கிறது! ஏனெனில் படைப்பாளியின் நோக்கம் படைப்பாக இருந்ததேயன்றிக், குறுகிய நோக்குப் புகவில்லை. விளக்கம் இருந்ததேயன்றி விருப்பு வெறுப்பு இல்லை!.

வி

-

ஒரு குறளின் பொருளை, ஒரு வழக்குச் சொல் ‘கழிசடை'ச் சொல் தந்து விடுகிறதென்றால் பொதுமக்கள் வழக்கு எப்படி எப்படியெல்லாம் போற்றிக் கொள்ளத் தக்கது.

-