உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. களை

எங்கேயோ ஒருவரைப் பார்க்கிறோம். அவரை முன் பின் தெரியாது. நமக்கு எவ்வகைத் தொடர்புடையாரும் அல்லர். பால்வேறுபாடு உடையாரும் அல்லர். ஆயினும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறார் பன்முறை அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்து மகிழத் தூண்டி விடுகிறார்.

கள்ளம் கவடு இல்லாத முகம், குழந்தை முகம். பால் வழியும் முகம். பார்த்தால் பசிதீரும் முகம் என்றெல்லாம் நாம் நினைத்து உள்ளுள் மகிழச்செய்கிறார். “ஓர் அழகரைக் காணுங் கால் இவ்வழகரைப் படைத்த இறைமை எத்தகு திறமையானது என மகிழவேண்டும் என்று நாலடியார் கூறுவதை மெய்ப்பிக்கும் பொலிவுடையவராகத் திகழ்கிறார். அத்தகு முகத்தைக் களையான முகம் என்றும் முகக்களை என்றும், அதனை உடைய வரைக் களையானவர் என்றும், களையான முகத்தர் என்றும் யாரும் தூண்டாமலே நமக்குள் உணர்ந்து பூரிக்கிறோம்.

பொலிவுக்கும் அல்லது அழகுக்கும் களைக்கும் தொடர்பு உண்டா? களை என்பது அழகாகுமா? அகர முதலியில் களை என்பதற்கு அழகு எனப் பொருள் வழங்கினாலும் ஏற்கத் தக்கது தானா? ஏற்பது எப்படி?

களை என்பது பயிருக்கு இடையே முளைத்து, பயிருக்குரிய நீரையும் ஊட்டத்தையும் கொண்டு வளர்வதுடன் பயிரை நலித்தும் விளைவைக் கெடுத்தும் தீமை செய்வதன்றோ? ஏரினும் (உழவினும்) நல்லது எருவிடுதல்; எருவிடுதலினும் நல்லது களை வெட்டல் என்று திருவள்ளுவர் ஓதுகிறாரே? முளைக்கும்போதே முள்மரம் போன்ற களை களைக் களைந்து விட வேண்டும்! இல்லாவிடின் களைபவன் கையையே அழித்து விடும் களை என்கிறாரே! இக்களை அழகாகுமா? கவர்ச்சி யுடையதாகுமா?

ஓடுகிறோம்; கடினமாக இடையீடு இன்றி உழைக்கிறோம். களைப்பு உண்டாகிறது! களைப்பாற வேண்டிய கட்டாயம் உண்டாகின்றது. களைப்பாறுதல், களையாறுதல், இளைப்