உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

89

பாறுதல், ஓய்வு எடுத்தல் என்றெல்லாம் அமைந்து களைப்பு நீங்கிப் பின்னர் ஓய்வாலும் உறக்கத்தாலும் உணவாலும் ஊக்கம் பெற்று மீண்டும் உழைப்பில் இறங்குகின்றோம். களைப்பு களை (அழகு) ஆகுமா?

களை களைதல் என்பதொரு தொழில். களைதல் என்றாலே களை களைதல் தான்! எனினும் தெளிவு கருதிக் களை களைதல் எனப்படுகின்றது. அதனை எண்ணிப் பார்த்தால் களையின் அழகுப் பொருள் தெளிவுற விளங்கும்.

‘களை’ என்பதற்குச் சுழற்று, பிடுங்கு, போக்கு, அவிழ், அகற்று, நீக்கு, விலக்கு என ஏவற்பொருள்கள் உண்டு. 'களைதல்’ எனின், கழற்றுதல், பிடுங்குதல் முதலாக முதலாக மேற்கூறியவை அமையும்.

களை மண்டிக் கிடக்கும் இடத்தையும் களை களைந்த டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘களை’ நன்கு வெளிப்பட விளங்கும். அதற்கு, அழகு, பொலிவு, கவர்ச்சி முதலாக அமைந்த பொருள் நயம் தெளிவாகப் புலனாகும்.

களைதலுக்கு உரியவை எவையோ அவை களை எனப் படுதல் கண்கூடு. புல், கீரை, செடி, கொடி, மரம், குப்பை, சண்டு, சாவி, இலை, தழை, எவையெனினும் களைதற்கு உரியவை யெல்லாம் களைகளே! களைகளைக் களைந்தபின் ஏற்படுவதாம் பொலிவும் நலமும் களையே!

களையெடுத்து நீர் பாய்ச்சிப் பசுமைக் கோலங் கொண்டு நிற்கும் பயிர் நிலத்தைப் பார்க்கப் பார்க்க உள்ளம் கொள்ளை கொண்ட உழவன் அதில் களையைக் கண்டான்! பாடுபட்டுக் களைத்த களைப்பையெல்லாம் களையத்தக்க களையைக் கண்டு களித்தான்! களைக்கு அழகுப் பொருளை அருளினான்.

ன்

அழகுக்கெனவே வளர்க்கப்படும், போற்றிக் காக்கப்படும் பூங்காவில் களைவன களையாவிடின் கவர்ச்சியுண்டா; வயலுக்குக் களையெனக் களைவனவற்றையே பூங்கா த பயிரெனக் கொண்டிருந்தாலும் அதனை ஒழுங்குறுத்தி, வெட்டுவ வெட்டிக், கொய்வ கொய்து, குப்பை கூளம் அகற்றிச் செப்பமுறுத்தாக்கால் பூங்கா எனப்படுமோ? கவின் பெறு வனப்பு எனக் கருதப்படுமோ? 'காடு' எனப்படும்! 'கா எனப்படாது. களைதலால் ஏற்படுவது களை என்பதைப் பூங்கா தன் பொலிவால் தெளிவித்தலை எவரே அறியார்.