உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. களைகண்

விளைபயிர்க்கு

இடையூறாய் வளரும் பயிர், களை என்பதாகும். களை என்பது களைதல் என்னும் தொழில் வழியாக வந்த பெயராம். அகற்றுதல் போக்குதல் நீக்குதல் கழற்றுதல் ஒதுக்குதல் முதலியவை களைதல் பொருளில் வருவனவே என்பதை அறிந்தோம்.

களையைக் களைதலுக்கு வந்த களைதல் பெயர், ஆடை களைதல், அழுக்கு களைதல், உமிகளைதல் எனப் பருப் பொருள்களுக்கு வருவதுடன் துயர் களைதல் எனக் கருத்துப் பொருளுக்கும் வரும் எனவும் அறிந்தோம்.

பிறரால் களைதற்கு உரிய துயரும் உண்டு; களைதற்கு அரிய துயரும் உண்டு; களைதற்கு முடியாத துயரும் உண்டு, களைவருந்துன்பத்தைக் காட்டுவார் கம்பர் (உயுத்த 2536)' களையாத துன்பத்தைச் சுட்டுவார் இளங்கோவடிகளார்,

(சிலப். 19:17)

ஒரு

களைகண் என்பது இருசொற்களே எனினும் சொற்றன்மைப்பட்டு நின்றது. கண் என்பது ஓர் உறுப்புப் பெயர் எனினும் அவ்வுறுப்பின் பயனாம் அருள் என்னும் பொருள் கொண்டு நின்றது. களைகண் என்பது ‘துயர் களையும் அருளுள்ளம்' என்னும் பொருள்தரும் தனிச் சொல்லாகப் பழமை தொட்டும் பெருக்கமாகவும் வழங்கி வருகின்றது.

வெருவந்த செய்யாமை (அஞ்சத்தக்க செயலைச் செய்யாமை) என்பதை அடுத்துக் ‘கண்ணோட்டம்' என்றோர் அதிகாரம் வள்ளுவர் வகுத்ததும் அதில் ‘கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம்' என்றும், 'கண்ணென்னாம் கண்ணோட்ட மில்லாத கண்' என்றும், கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் என்றும், கண்ணோடாக் கண் புண்' என்றும், 'கண்ணோட்டத் துள்ளது உலகியல் என்றும் கூறிய கருத்துகள் அருளின் பாலனவாம். கண்ணோட்டமாவது கண்ணால் காணப்