உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பட்டாரை அருளிச் செய்தல்' என மணக்குடவரும் பரிப் பெருமாளும் உரைத்தனர்.

'தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை' என்றார் பரிமேலழகர். அவர் கூறியன என்பது அவர்தம் அல்லல், வறுமை என்பன உரைத்து அவற்றைத் தீர்த்தருள வேண்டுகையாம்.

"இளையரும் மகளிரும் களைகண் காணார் வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப

என்றும்,

எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய

பொருங்கயல் போல வருந்துபு மிளிராக்

களைகண் பெறாஅக் கலக்க நோக்கம்

என்றும் களைகண் கிட்டாக் கலக்க நிலையைப் பெருங்கதை விளக்கும்.

(2.17;86.7;2.19:101-4)

உளத்துணை ஒன்றில்லாத் தனிமையும் களைகண் தேடி ஏங்கும் என்பதையும்.

'தனிமைக் கிரங்கிக் களைகண் காணாது'

என்னும் அப்பெருங்கதை

(1.56:30)

களைகண் வாய்க்காமையால் படும் ஏக்கம் பெரிதாம்.

"எம் பெருமான் எமைக் கைவிடிற் பினையார்களைகண் உள்ளார்' என்பதில் களைகணை எதிர் நோக்கிய ஏக்கம் நன்கு விளங்கும் (கம்பர் ஆர 210). களைகண் தேடாமலே கண் முன்தோன்றிக் களைகண் அருளுமாயின் அப்பேற்றைக் கூற முடியுமா?

களைகண் ஈகுவென் கையறல் ஒழிக”

“திகழொளிக் கண்ணினன், களைகண் ணாகியோர்

இளைஞர் தோன்றி”

என்பவை பெருங்கதைக் காட்சிகள்

6

(5.4:30;5. 2:32-3)

களைகண் ஆக எவரில்லையேனும் தோழமையாளரேனும் இருத்தல் வேண்டுமன்றோ! அவரே இல்லை எனின் எவரே களைகண் ஆவார்?