உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் வளம் சொல்

'களைகண் ஆகிய காதலந்தோழன்'

என்பது அப்பெருங்கதை

(3.24:121)

93

களைகண் என்பதன் பொருள் களைகண் தேடுவார்க்கு உரிய இன்மைகள், அதனால் அவர்கள் படும் பாடு, அதனை நீக்குதற்குரிய துடிப்பு இவற்றையெல்லாம் தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு பாடலில் நினைந்து நினைந்து இரங்க- ஏங்க-எய்க்க-இனைய இயம்புகிறார்:

“ஊரிலேன்: காணி யில்லை; உறவுமற் றொருவ ரில்லை; பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!

காரொளி வண்ண னே! ஓ! கண்ணனே! கதறு கின்றேன்; ஆருளர் களைகண் அம்மா? அரங்கமா நகரு ளானே!

என்பது அது.

(நாலா திவ் 900)

துன்பந் துடைக்கவென்று இக்காலம் எழும்பும் பொது நல அமைப்புகள் பலப்பல. ஊண் உடை உறவு எல்லாம் வழங்கிக் கற்பிக்கத் துணையாம் அமைப்புகளும் உள. உடற்குறையர், ஏதிலியர் என்பாரைக் காக்கும் நிறுவனங்களும் உள. உளத்தால் உதவ முந்துறும் அவர்கள் மொழி நலமும் கருதலாம்? “களை கண் இல்லம் களைகண் குடி ல் களைகண் அவையம்” களைகண் மன்றம்” எனப் பெயர்கள் சூட்டலாம்! வழிநலம் பேணும் உள்ளம் மொழி நலமும் பேணுதல் முறைமை என்பது ஏற்படுமாயின் எத்தகு நலமாக இருக்கும்!

66

66

66

“கண்ணிய யாவர்க்கும் களைகண் ஆகிய புண்ணியர்” என அவரைக் கம்பர் வாக்கால் போற்றலாமே!

(பால. 1338)