உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. களைதல்

விதைத்து வளர்வது பயிர்; விதையாமல் தோன்றி வளர்வது களை; எப்பயிர் ஆனாலும் பயிராவதும் களையாவதும் விதைப்பதும் விதையாததைப் பொறுத்தனவே.

நெல், பயிர்தான்; பூங்காவில் முளைத்தால் களை! புல், களைதான்! பூங்காவில் வைத்துப் பயிரிட்டால் பயிர்!

களையை அகற்றுதல் 'களைதல்' எனப்படும். ஆனால் களைதற்குரியது 'களை' எனப்பட்டது என்பதையே செயற்பாடு விளக்குகின்றது.

களைதலைப் பற்றிய இலக்கியச் சொற்கள் பல. வழக்குச் சொற்களும் பல; வட்டார வழக்காய் இயல்வனவும் உள.

'களை வெட்டுதல்' என்பது வேளாண்மைத் தொழில்களுள் ஒன்று. வெட்டுதற்குப் பயன்படும் கருவி மண்வெட்டி; கருவிப் பெயரிலேயுள்ள வெட்டி, களைவெட்டுத் தொழிலையும் செய்யும் என்பதற்குச் சான்றாயிற்றே!

கல்லிலே வெட்டும் எழுத்து கல்வெட்டு? மண்ணை வெட்டும் கருவி மண்வெட்டி!

களைவெட்டுதல் பொருள்தரும் சொல் 'கட்டல்' ‘கட்டுதல்' என்பன களைதல் - கள்தல் கட்டல் என்று வந்தது.

-

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்”

என்பதில் களை கட்டலைச் சுட்டுகிறார் வள்ளுவர். களைதல் என்பதையும் அவர் குறிக்கிறார்!

66

இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து”

என்பது அது. களை களைதலை இன்றித் துயர் களைதலையும் களைதல் குறிக்கும்.