உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

95

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

என்பது துயர் களைவைக் கூறும் குறள்.

வெட்டல், கருவி வினை; கட்டல், கருவி வினையும்

கைவினையும் ஆம்.

வழிப்பறி என்பதில் ‘பறித்தல்' தொழிலும். நாற்றுப் பிடுங்குதல் என்பதில் ‘பிடுங்குதல்' தொழிலும் பூக் கொய்தல் என்பதில் எடுத்தல் தொழிலும் உள்ளமை விளங்கும். இவை கருவி வினைகள் அல்ல. கை வினைகளேயாம்.

களையைச் சுரண்டுதற்கென்றே அமைந்த கருவி, களை கரண்டிகளை கரண்டியின் இலையளவு (தகட்டளவு) சிறிது. அதனினும் அகலமாக அமைந்தது களை பரண்டி. அது படர் கொடிகளைப் பரண்டும் அளவு தகடு விரிவுடையது. சுரண்டுதல் பரண்டுதல் ஆகிய தொழில்களுக்குரிய கருவி சுரண்டியும் பரண்டியும்! சுரண்டி இல்லாமலே முதுகைச் சுரண்டலும், பொருளைச் சுரண்டலும் கண்கூடு; சில உயிர்கள் காலால் பரண்டல் இயற்கை.

களை குத்தல் ஒன்று; களை கொத்தல் மற்றொன்று முன்னதற்குரிய கருவி களை குத்தி; பின்னதற்குரியது. 'களை கொத்தி' களையின் வேரைப்பார்த்து நேராகக் குத்தி எடுக்க உதவுவது களைகுத்தி; இரும்பாலும் களைகுத்தியுண்டு; மரத்தாலும் களைகுத்தியுண்டு. களையைப் படர் பகுதியுடன் கொத்தி எடுக்க உதவுவது களை கொத்தி. குத்திக்கும் கொத்திக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு! பின்னே வேறுபாடு மறைந்ததும் உண்டு. ‘மீன் குத்தி’யை ‘மீன் கொத்தி' யென வழங்குதலும் உண்டே! “கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து” என்றார் வள்ளுவர்.

66

மண்வெட்டியுள் சிறியது 'கொட்டு மண் வெட்டி' என்பது அதனைக் களை வெட்டுதற்குப் பயன்படுத்துவதால் 'களை கொட்டு, என்பர். கொட்டுதலும் களை வெட்டுதல் பொருளில் வருவதைக் காட்டுவது இது.

இனி, அகழ்தல், தோண்டல், கல்லல், கிள்ளல், பறித்தல் பொருளில் வரும் சொற்களாம். இவை நான்கும் நுண்ணிய ய வேறுபாடுடையவை.