உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம்

15

கிள்ளலில் கல்லலும், கல்லலில் தோண்டலும், தோண்டலில் அகழ்தலும் ஒன்றில் ஒன்று நிலத்தில் ஆழமாகச் செல்பவையாம். நகத்தில் கிள்ளி எடுத்தல் என்னும் வழக்கால் விரலளவு ஆழம் கிள்ளலாம்; கிழங்கு கல்லி எடுத்தல் என்பதால் அதனின் ஆழம் கல்லல்; தோண்டுதல் மண்வெட்டி பதியும் அளவு கடந்து செல்வதால், அதனின் ஆழமானது கம்பி போட்டுக் குத்தி எடுக்கும் அளவுடையது அளவுடையது அகழ்தலாதலால் அதனினும் ஆழமானது. அது அறுகு கிள்ளல் அன்று; கல்லல் அன்று; தோண்டல் அன்றும், அகழ்தலாம் ‘அறுகுபோல் வேரூன்றி " என்னும் வாழ்த்தே வேராழம் காட்டும். எட்டடி ஏழடிகளுக்குக் கீழும் கரிசல் நிலத்தில் அறுகின் வேரும் கிழங்கும் படிந்திருத்தல் உண்டு. கிணறு அகழ்வதுபோல் அகழ்ந்தெடுப்பதும் காணலாம்.

தோண்டலின் ஆழத்தை விளக்குவதொரு சொல் தோணி தொள்ளம் தோளம் என்பனவும் தோணியின் பெயர்களே. பரிய மரத்தைக் குடைந்து மிதவையாக்குதலால் தோணியாயிற்று. தோண்டி அமைக்கப்பட்டது தோண்டி, 'தோணி' ஆயிற்று!

களை வெட்டி முடித்து அக்களையைப் பறித்த இடத்திலேயே போட்டுவிட்டால் மீண்டும் முளைப்பதும் உண்டு. ஆதலால், அதனை வாரிப்போடுதற்கு ஒரு கருவியுண்டு அதற்குக் களை வாரி என்பது பெயர். களை களைதல் வினைக்குத் தமிழில் எத்தனை எத்தனை சொற்கள்?

களை வெட்டல், களை கட்டல், களை கொட்டல், களை கொத்தல், களை கொய்தல், களை பறித்தல், களை எடுத்தல், களை சுரண்டல், களை பரண்டல், களை கிள்ளல், களை கல்லல், களை தோண்டல், களை அகழ்தல், களை பிடுங்கல், களை வாரல் முதலியன.

இத்தகைய தமிழ்ச் சொல்வளம், தமிழின் தனிவளம்

அல்லவோ!