உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. காக்கை

காலையில் நாம் எழுகின்றோமோ இல்லையோ காக்கை எழுந்துவிடுகின்றது! 'கா கா' எனக் கரைந்து நம்மை எழுப்பியும் விடுகின்றது!

காகம் ‘கா கா' எனத் தொடுத்துக் கரைகின்றதா? இல்லை! காக்கை ஒன்று ஓரிடத்தில் இருந்து ‘கா’ என்று குரல் கொடுத்தால் இன்னோரிடத்தில் இருக்கும் காக்கையொன்று 'கா' என்று மறு குரல் கொடுக்கும்! மாறி மாறி இவ்வாறு கேட்பது வியப்பாக இருக்கும்!

ஒன்று, 'நான் இங்கே இருக்கிறேன்' என்று குரலிட்டுக் காட்ட, மற்றொன்று 'நான் இங்கே இருக்கிறேன்' என இட டஞ் சுட்டிக் காட்டி இனஞ்சுட்டிக் கொள்ளல் வியப்பேயாம்! இவ்வியப்புணர்ந்தே ‘கா கா' என்று கரையும் அப்பறவையைக் ‘காக்கை’ ‘காக்கா”, “காகம்' என முன்னோர் வழங்கினர்.

கரைதல் என்பதற்கு ‘அழைத்தல்' 'கூப்பிடுதல்' எனப் பொருள் கண்டனர். அப்பொருளும் மக்கள் அழைப்போடு நில்லாமல், 'கலங்கரை விளக்கம்' எனப் பெயரிட்டழைக்கவும் தூண்டலாயிற்று. கப்பல்களை அழைக்கும் விளக்கே கலங்கரை

விளக்கம்.

காகத்திற்கு அச்சம், சினம், கிளர்ச்சி, மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகள் உண்டாகி விடுமானால் ஒரே காகம் 'காகா' எனப் பன்முறை கத்தவும் செய்யும்? பல காகங்கள் சேர்ந்தும் இடை யீடின்றிக் ‘காகா’ எனக் கத்தவும் செய்யும் இவ்வொலியைக் கேட்ட அறிவாளர், அவ்வொலியையும், அக் கூட்டத்தையும் ‘காகளம்' என்றனர். களம் இடமும் கூட்டமுமாம்! 'காலம் களனே' என்பது நன்னூல், களவன்' என்பது நிகழிடத்திருந்த சான்றாளன்;

“காகம் கலந்துண்ணல்’ திருமூலரால் பாராட்டப்படும்; 'காகம் கரைந்துண்ணல்' திருவள்ளுவரால் சிறப்பிக்கப்படும்