உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் 15

ஆனால் ‘எத்தித் திருடும் காகம்' என்பதைக் கண்ணாரக் காண்கிறோமே!

எத்தித் திருடியதைக் கரைந்து உண்ணாது காகம்; கரந்தே உண்ணும்! எத்தித் திருடாமல் இயல்பாகக் கிடைத்ததையும், காடையாகக் கிடைத்ததையும் உண்ணுங்கால் கரைந்தே உண்ணும்; அதனால் தான் திருவள்ளுவர்,

‘காகம் கரவா கரைந்துண்ணும் ம

99

என்றார்! பொருள் வந்த வகைக்கு ஏற்ப வெளிப்படையாகவும், கரவாகவும் துய்க்கப்படுதலைக் காகம் விளக்குமோ? காகத்தை உணர்ந்த வள்ளுவர் உள்ளம் விளக்குமோ?

காக்கை கரைந்துகொண்டு வீட்டைச் சுற்றினால் விருந்து வரும், என்பது மாந்தர் நம்பிக்கை! பிரிந்த தலைவன் வருவான் என்பது தலைவியின் நம்பிக்கை! இனத்தை அழைத்து இனத்தோடு உண்ணும் காக்கையின் இயல்பு இந்நம்பிக்கைக்கு மூலமாகலாம்!.

பிரிந்த தலைவன் வர இருப்பதைக் காக்கை தன் கரைவால் சொல்லியதாம். அதற்கு மகிழ்ந்த தலைவி ஏழு கலங்களில் நெய்யொடு கலந்து நெற்சோறு வழங்குவாளாம்! இப்படிப் பாடிய புலவர் பெயர் நச்செள்ளையார்! பாணர் குடியினர்! அவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப்பட்டார்! காக்கை தந்த பெயர்க் கொடைதானே இது. (குறுந். 210)

இவருக்குப் பின்னேயும் காக்கை பாடினியர் இருவர் இருந்துளர். அவர்கள் இலக்கணப் புலமையாளர்; பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார் என்பவை அவர்கள் பெயர்கள், பெருங் காக்கை பாடினியம், சிறு காக்கை பாடினியம் என்பவை அவர்கள் இயற்றிய நூல்கள்!

காக்கையின் கொடை இவ்வளவுடன் நின்றதா?

காக்கையின் மூக்குப் போன்ற மூக்கை உடையவன் ‘காக்கை

மூக்கன்”

மாறுகண்ணையுடையவன் ‘காக்கைக் கண்ணன்.’

காக்கைக் கால் விரல் போல் வயிரத்தில் அமைந்த வரி 'காக்கைக் கால்', 'காகபாதம்!’

ஊர்பேர் அறியாமல் வந்து போகின்றவன் ‘காக்கன்

போக்கன்!’