உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

115

ஒரு கொக்கு ஒலியெழுப்பிக் கொண்டும், தலையைத் தூக்கிக் கொண்டும் மற்றொரு கொக்குடன் மோதச் செல்லும் காட்சியை ஒருவன் உற்றுக் கண்டும் கேட்டும் சிந்தித்தான். அதன் ஒலியும் எடுத்த தோற்றமும் அவனை வயப்படுத்தின. அதனால் அவன் எண்ணத்தில் 'கொக்கரிப்பு' அப்பறவைகளின் செ செயலுக்கு ஆகி அதன் பின்னே மாந்தர் செருக்கைச் சுட்டுவ தாகவும் வளர்ந்தது. 'உன் கொக்கரிப்புக்கு நான் அஞ்சிய ஆளா' என்று எதிரிட்டுக் கொக்கரிக்கும் காட்சி நாம் அறியாத தன்றே! 'கோழி கொக்கரிக்கும்' என்பதும் நாம் கேளாத தன்றே!

ருக்கிய

கொக்கு + அரி = கொக்கரி; அரி என்பதன் பொருள் ஒலி, சிலம்பு முதலியவற்றில் ஒலியுண்டாகப் போடப்படும். முத்து, மணி, கல் முதலியவை ‘அரி' எனப்படும். பாண்டியன் ‘முத்துடை அரியே' என்றதும், கண்ணகியார் மணியுடையரியே' என்றதும் சிலம்புச் செய்தி. ‘அரிக் குரல் கிண்கிE' என்பது மழலையர் காலணி. ‘அரிக்கூடு இன்னியம்' என்பது இசைக் கருவி.

கொக்கின் ஒலி ஒலி போல் ஒலிக்க ஓர் இசைக்கருவி படைத்தான் இசைவல்லான் ஒருவன். அவன் அதற்குக் கொக்கரி' என்றும் ‘கொக்கரை' என்றும் பெயரிட்டான்' கரடி போல் ஒலிப்பதைக் கரடிகை’ என்றும் ‘சல்சல்' என ஒலிப்பதைச் ‘சல்லிகை' என்றும் பெயர் வைத்தவன் அவன். ஆதலால், ‘கொக்கரி’ அமைத்தல் அவனுக்கு இயல்பாயிற்று.

கொக்கின் உயரமான காலில் ஒருவன் உள்ளம் தோய்ந்தது. அதன் உடலுக்கும் காலுக்கும் உள்ள பொருந்தாப் பொருத்தம் அவனை வயப்படுத்திற்று; ஒல்கி (ஒல்லி) யாய் நெடிதுயர்ந்த நெடுங்காலனை. ‘நெட்டைக் கொக்கன்' என்றும், 'கொக்கன்’ என்றும், ‘கொக்குக் காலன். என்றும் பட்டப் பெயர் சூட்ட ஏவிற்று. அப் பட்டப் பெயரே பெயராய் அமைந்தாரும் நாம் அறியாதவர். அல்லரே!.

அக்கால் அவ்வளவுடன் நின்றதா? மூன்றுகால் இருக்கை முக்காலியாய், நான்கு கால் இருக்கை நாற்காலியாய் அமைந்தது வெளிப்படை. அவ்வாறு இருக்கை ஆகாமல் கால் நீண்டதாய் ஒட்டடை தட்டவும், அட்டளைப் பொருள் எடுக்கவும், கட்டட வேலைக்குப் பயன்படுத்தவும் அமைந்த ‘நெடுங்காலி'யாம் செய் பொருளுக்குக்’ ‘கொக்குக் காலி' எனப் பெயரிடச் செய்தது. கொக்குக் காலியே. 'கொக்கு காலியாய் கோக்காலியாய் வழக்கில் உள்ளதாம். கொக்கின் வளைவென்க, கொக்குச் சொல்லாய்வும் வளையமிடுவதைத் தொடர்வோம்.

s