உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கோயில்

கோயில் என்பதா? கோவில் என்பதா? இருவகையாலும் சொல்லுகின்றனரே. கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் கூட ரு வகையாலும் எழுதுகின்றனரே, எது சரியானது?

என்று

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா பள்ளிப் பிள்ளைகளுக்கும் சொல்லி வைத்தார் பாட்டி. கோயில் இல்லா ஊரே தமிழகத்தில் இல்லை என்பதும் உண்மை! அக் கோயில்களிலேயும், அதன் விளம்பரத்திலேயும் கூடக் கோயிலும், கோவிலும் மாறிமாறித் தலைகாட்டி மயக்குகின்றனவே; கோயில் பெயரிலே கோயிலுக்கே குழப்பம் வரலாமா? கோயில் ஊர்களிலே குழப்பம் வரலாமா?

‘கோ’ என்பது ஓர் எழுத்து ஒரு சொல். இதற்கு நாற்பதிற்கு மேற்பட்ட பொருள்கள் உளவாயினும், அரசன், தலைவன், இறைவன் என்னும் பொருள்களின் அடிப்படையிலேயே 'கோயில் என்பது வந்தது, 'கோஇல்' என்னும் இரு சொற்களின் இணைப்பே 'கோயில்' என்பது அனைவரும் அறிந்ததே.

கோ-அரசன்; அவன் கோமகன், கோமான், கோவேந்தன் என்றும் வழங்கப்பெற்றான். அரசி கோமகள், கோமாள், கோப் பெருந்தேவி, கோயிலாள் என வழங்கப் பெற்றாள். இருவர்க்கும் தனித்தனி அரண்மனைப் பகுதிகள் இருந்தன. ‘அரசுறை கோயில் 1. “அரசன் செழுங்கோயில்”, 2. “கோமகன் கோயில்”, 3. என்றும் "கோப்பெருந்தேவி கோயில்”, 4. “கொங்கவிழ் குழலாள் கோயில்" என்றும் வருவனவற்றால் அறியலாம்.

இனிப் பொதுவகையால், 'கோயில்' என்று வருவன இரண்டன் பகுதிகளையும் உட்கொண்ட அரண்மனைகளையும் காவல் மிக்க மாளிகை இடங்களையும் குறிப்பனவாம். “சோழன் கோயில்” 6. “ஆஅய் கோயில்”, 7. “காவல் வெண்குடை மன்னவன் கோயில்”, 8. “மாலை வெண்குடை மன்னவன் கோயில்”, 9. “மறத் துறை விளங்கிய மன்னவன் கோயில்”,10. “பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயில்", 11. "வேறுபட்ட வினை யோவத்து வெண்கோயில்”, 12. என இவ்வாறு வருவனவற்றால் விளங்கும்.