உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயிலில்

தமிழ் வளம் – சொல்

பணிபுரிந்தவர்கள்

கோயின்

117

மாக்கள்,

கோயிலார் எனப் பெற்றனர். அரண்மனைத் தொடர்பால் பெற்ற பெயர்கள் இவை என்பது வெளிப்படை.

·

காவல் கடமை புரிந்த வேந்தனைக் கடவுளாக மக்கள் மதித்தனர்; வழிப்பட்டனர். “மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்’ என வாழ்ந்தனர். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்” என அறநூல் கூறும் அளவுக்கு அரசர் செல்வாக்கு இருந்தது. அவர் தம் அரண்மனைக்குள்ளே இறைவனும் கோயில் கொண்டான்; அவன் கோயில் கொண்ட இடமும் கோயில் ஆயிற்று. அரசர்க்குரிய விழாக்களும் சிறப்புக்களும் கோயில்களுக்கு உரியவையாயின. இந்நிலையில் அரசன் கோயிலும் இறைவன் கோயிலும் ஒன்றாகியும், வேறாகியும் விளங்கின. இதனை,

“அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்”

என்றும்,

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்"

என்றும் இளங்கோவடிகளார் இயம்புகின்றார்.

66

-

13

14

‘அரண்மனை, பெருமாளிகை, இறைவன் குடிகொண்ட இடம் ஆகியவை கோயில் என வழங்கப்பெற்றன' என்பதை நாம் தெளிவாக அறிகின்றோம். இவற்றுள் எந்த ஓர் இடமும் எந்த நூலிலும் - கோயில் என்பதை அன்றிக் 'கோவில்' எனக் குறிக்கப் பெற்றதே இல்லை. பழந்தமிழ்ச் சான்றோர் காலம் தொட்டு ஒளவைப்பாட்டி காலம் வரைக்கும் கூட 'கோயில்' மாறவில்லை.

இடைக்கால பிற்காலங்களில் எழுந்த கோயில் திருவாய் மொழி, கோயில் நான்மணிமாலை, கோயில் கலம்பகம்; கோயில் புராணம், கோயில் திரு அகவல், கோயில், திருப்பணியர் விருத்தம் என்பவற்றிலும் ‘கோயில்' செவ்வையாகவே இருந்தது. ‘கோயில் ஒழுகு' என்னும் நூலும் தன் ‘ஒழுகு’ தவறாமலே இலங்கியது. ஆனால்! இன்று கோயிலும் கோவிலும் குழம்பிக் குலாவுகின்றன,