உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் 15

ம்

அகர வரிசை நூல்கள் கோயிலொடு கோவிலுக்கும் இடம் தந்துவிட்டன. ஆனால் நிகண்டு நூல்களில் “கோவில்’ புகுந்திலது.

66

ஆசிரியர் தொல்காப்பியனார் உயிர் மயங்கியலில், லொடு கிளப்பின் இயற்கை யாகும்” (91) என்றார். அதற்கு. ஓகாரவீற்றுக்கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும்" என உரை கூறிக் என உரை கூறிக் 'கோயில்" என எடுத்துக்காட்டுத் தந்தார் இளம்பூரணர். ஆனால், இதே உரையைத் தழுவிக் கொண்ட நச்சினார்க்கினியர் உரை கோவில்” 6 என எடுத்துக் காட்டுத் தருகின்றது. இஃது ஏடு எழுதியவர் தவறாகவோ; பெயர்த்தவர் தவறாகவோ அமைதலும் கூடும்!

கோவூர், கோவியன் வீதி என்பன சங்கச் சான்றோர் நாளிலேயே வழங்கப் பெற்றனவே எனச் சிலர் எண்ணவும் கூடும். கோவூர் என்பது வகர உடம்படு மெய் பெற்று நின்றது. மற்றது, கோவியன் வீதி' எனப் பிரிந்து ‘வியன்' என்னும் அகற்சிப் பொருள் தரும் உரிச்சொல்லாக நின்றது. “இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை, ஐ உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ் விருமையும், உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்' 15 என்று நன்னூலார் உடம்படு மெய்க்கு விதித்த விதி கோயிலுக்குப் பொருந்தாது. அதனால் அன்றே, உரைகாரர் “கோவில்” எனக் காட்டார் ஆயினர். காட்டினும், இலக்கிய வழக்கொடு முரணுவது' என்று தள்ளுவதே முறையாம்.

66

66

"இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’

என்பது தொன்னெறி. அம் மரபு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை போற்றப் பெற்றது. “மரபு நிலை திரியின் பிறிதுபிறி தாகும் என உணர்ந்து “கோயில்’ எனச் சொல்லுதலும் எழுதுதலும் கடமையாம். 16, 17.

1. சிலப். 18: 25;2. சிலப், 19:75; 3, சிலப், 22:14; மணி 7:64 4. சிலப் 16 - 139; 5. மணி 23; 38; 6. புறம், 378: 7. புறம். 127;8 சிலப். 3.1 8;9 சிலப் 5: 173; 10. சிலப். 14; 12; 11. சிலப். 13: 138; 12. பட். 50: 13; 13. சிலப் 13: 137-8; 14 சிலப், 5. 169: 173; 15 நன்னூல் 162; 16. 'கோயில்' எனவழங்கும் இடங்கள் வரம்பிலவாக இருத்தலின் அவற்றை யெல்லாம் காட்டாது சிலவே சுட்டப் பெற்றன. 17 பிற்காலப் புலவர்கள், அறிஞர்கள் ஆகியோர் மரபு நிலை மாறாமலும், மயங்கியும் எழுதியவற்றைக் கற்பார் கண்டு கொள்வர் எனச் சுட்டிக்காட்டப் பெற்றில.