உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. சட்டினி

‘சட்னி' என்பது பெருவழக்குச் சொல். இட்டவி தோசை இருக்கும் இடங்களிலெல்லாம் இருப்பது ‘சட்னி', இதனைத் தமிழ் மரபில் ‘சட்டினி' என எழுதுவர். 'இ 'லி'யை 'இட்டிலி’ என எழுதுவது போல என்க.

66

சட்னி தமிழ்ச் சொல்லே என ஆர்வத்தால் சொல்பவர்கள் 'சட்டுணி' என வடிவமைத்துக்கொள்வர். 'சட்டு என்பது விரைவுக் குறிப்புச் சொல். 'சட்டெனவா சட் L ன்று எதையும் செய்யமாட்டாள்” என்பவை வழக்கில் உள்ளவை. ‘சட்டுப்புட்டு' என்று பார்த்துவிட்டு வா என இணைச் சொல்லாகியும் விரைவுக் குறிப்பு உணர்த்தும். ஆதலால், சட்டென விரைவாக உண்பதற்குத் துணையாவது “சட்டுE' எனப் பொருத்தம் காட்டினர். இது, தமிழ்ச் சொல்லாக்கிக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடேயன்றி, இச்சொல் தமிழ்ச்சொல் அன்றாம்.

‘ரஸ்தா’ என ஒரு சொல் வந்தது. விளைவு என்ன ஆனது? எந்தக் குப்பை எனினும் புதிது என்றால் உடனே பற்றிக் கொள்ளும் வழக்கே வழக்காக்கிக் கொண்டுவரும் போலித் தன்மையில் திளைக்கும் தமிழர், எத்தனை சொற்களைக் கைவிட்டனர்? ஆறு, நெறி, வழி, பாதை, தடம், தடி, சாலை, பெருவழி, நெடுவழி, தனிவழி, பொது வழி முதலாம் தமிழ்ச் சொற்களை ஓங்கி உதைத்து ஒழித்துக் கட்டிவிட்டதை வரலாற்றுலகம் நன்கு அறியும். இது கண்ணேரில் காணும்

காட்சி!

66

'சாலை' முதலிய சொற்கள் ஒரு ‘ரஸ்தா'வால் இப்படிப் போயினவே என வருந்தியவர்கள், ‘மங்கம்மாள் சாலை மறந்து விடாதே சோலை' என்பது போன்ற பழமொழி, பொதுமக்கள் வழக்கு ஆகியவற்றை எண்ணிச் சாலையைத் தலை காட்ட வைத்தனர். ஆனாலும் மேலும் என்ன ஆனது?