உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் 15

ஆங்கில ‘ரோடு’ வந்தது. நாடெல்லாம் பரவியது. தமிழ்ச் சாலைக்கு மூடுவிழாவைத் தமிழரே முனைந்து நடத்திவிட்டனர்! இப்படித்தான் ‘சட்னி’யின் ஆட்சி நிகழ்ந்தது.

‘சட்னி' என்பது உருதுச்சொல். அச்சொல் வருமுன் தமிழில் வழங்கிய சொல் துவையல். ஒரு துவையலா வழக்கில் இருந்தது? இருக்கின்றது?

மிளகாய்த் துவையல், பொரிகடலைத் துவையல்' தேங்காய்த் துவையல், கறிவேப்பிலைத் துவையல், பயற்றுத் துவையல், மல்லித் துவையல், புதினாத் துவையல் என்பன நாம் அறியாதனவா?

துவையலின் சுவை விளங்கக் காரத்துவையல், உறைப்புத் துவையல், புளித்துவையல், எனவும், அதன் இறுக்கநிலை, நெகிழ்நிலை ஆகியவை விளங்கக் கட்டித் துவையல், கரை துவையல் எனவும் வழங்குகின்றது.

அம்மியில் வைத்துத் துவைத்து (அடித்துத் தட்டி) ஆக்கு வதால் துவையல் ஆயிற்று. துணி சலவை செய்வதைத் துவைத்தல் என்பது அறிக.

துவையல் போலவே பொரியல், அவியல், வறையல், வற்றல், கூட்டு, குழம்பு முதலானவை தொழில் வழிவந்த பெயர்களே.

துவையல் வழக்கு முற்றாக அழிந்து விடவில்லை. இட்லி தோசையொடு கூடுகின்ற நிலையில்தான் அழிந்துவிட்ட து. சோற்றுணவுடன் சேரும்போது தன் ஆட்சியை விடாமல் வைத்துக் கொண்டுள்ளது. 'கட்டித் துவையல்’ சோற்றுக்கு என்றால், ‘கரை துவையல்' தோசை இட்டவிக்கு!

66

டம்

கரைதுவையலின் தலையில் கைவைத்த ‘சட்னி’ கட்டித் வையலையாவது விட்டதா? கட்டிச்சட்னி’ என்னும் பெயரால் அதன் தலையையும் தடவி விட்டது! கொடுத்தால் மடம் பிடுங்குவான்" என்பதும், “ஊசி நுழைய இடம் தந்தால் ஒட்டகம் நுழைந்துவிடும்" என்பதும் பழ மொழிகள்.

என்பவை

ஒரு ‘ரசம்’ வந்தது; மிளகுச் சாறு, மிளகுத் தண்ணீர், மிளகு நீர் என்ப அழிந்தன. புளிச்சாறு என்பதும் அவ்வகையினதே. புளிக்குழம்பு கட்டியானது அதுவேறு. புளிச் சாறு வேறு, ஆங்கிலவரும் மிளகு தண்ணியைக் கொண்டனர். நம் தமிழரோ இரசத்தில் திளைக்கின்றனர்.