உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

153

அப்பட்டம் என்பது பெருவழக்குச் சொல். ‘அப்பட்டமான பொய்' என்பது எங்கும் கேட்கக் கூடியது. அப்பு அட்டம் அப்பட்டம் ஆயது. ‘அப்புதல் அமைந்தது' என்பது பொருள். அப்புதலாவது இட்டுக்கட்டியுரைத்தல்; புனைந்துரைத்தல்; இட்டுக்கட்டிய பொய்; புனைந்து கூறிய பொய் என்பது இதன் பொருளாம்.

‘அப்பழுக்கு இல்லாதானை' என்பதில் உள்ள அப்பழுக்கும் பெரு வழக்குச் சொல்லே. அப்பு அழுக்கு அப்பழுக்கு, அழுக்கு மாசு, குற்றம், குறை, கறை, அப்பிய அழுக்கு எதுவும் இல்லாதது தூயது. அத்தன்மையுடையவன் 'தூயன்' என்க.

உடலிலே அப்பு அழுக்கும் உடையிலே அப்பு அழுக்கும் நீரால் போகும். உள்ளத்திலே அப்பும் அழுக்கை எதனால் போக்குவது?

'கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?' உள்ளத்து

அழுக்குப் போகாதே! அதனால்,

66

"புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்

என்றார் திருவள்ளுவர்.

6

'அப்புக்குட்டி' என்பதொரு பெயர். தாயை விட்டுப் பிரியாது ஒட்டித் திரியும் ஆட்டுக் குட்டியை ‘அப்புக்குட்டி என்பர். அப்பெயர் மக்கட் பெயராகவும் வழங்கலாயிற்று. 'பார்ப்பு' என்னும் பறவைக் குஞ்சின் பெயர் 'பாப்பு' ‘பாப்பா' எனக் குழந்தை பெயராகவும் வழங்குவது போன்றது அது.

ஆடுமாடுகளின் அரத்தத்தை (இரத்தத்தை) உறிஞ்சி உண்ணும் ஓர் உயிரி உண்ணி' எனப்படும். அவ்வுண்ணிக்கு அப்புண்ணி என்பதொரு பெயர். அதன் ஒட்டுதலை விளக்குவது 'ஒட்டுண்ணி' என்னும் அதன் மற்றொரு பெயர்.

நெருங்கியவர் உடையிலும், நெருங்கிய உடலிலும் ஒட்டும் புல் ஒன்றுண்டு. அதற்கு ஒட்டுப்புல் என்பதொரு பெயர். ‘அப்புப்புல்' என்பது மற்றொரு பெயர்.

‘அப்பு' மேலும் அப்புவதே! இவ்வளவில் அமைவோம்:

அட்டமணியம்

‘வட்டம் சுற்றி வழியே போ என்றால் அட்டத்தில் பாய்ந்து விட்டான்' என்பது வழக்குச் சொல். ‘அட்டம்' என்பது குறுக்கே து என்னும் பொருளது.