உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்

15

நட்டணைக்கால் என்பது நிலத்தில் ஊன்றிய கால்: அட்டணைக்கால் என்பது நட்டணைக்கால்மேல் குறுக்காகத் தூக்கிப் போட்ட கால்.

வட்டம் முழுச் சுற்று; அட்டம் குறுக்கு.

‘அட்டமணியம்' என்னும் சொற்றொடரில் அட்டம் என்பதற்குக் குறுக்கு என்னும் பொருள் தெளிவாகிறது. மணியம் என்பதன் பொருள் என்ன? நாட்டாட்சியின் சிறிய அளவு ஊ ளராட்சி. பல்லாயிரம் ஊராட்சிகளின் தொகுப்பே நாட்டாட்சி. ஊராட்சி செய்பவர் ஊர் மணியம் (கிராமமணியம்). அவரே ஊரின் ஆட்சியாளர்.

ஆங்கிலர் ஆட்சியில் இந்தியப்பரப்புக்குத் துணையரசர் (Vice Ray) இருந்தார். மாநில ஆட்சிக்கு ஆளுநர் (Covernar) இருந்தார். அவ்வாறே மாவட்ட ஆட்சியில் இருந்து ஊராட்சி வரை ஆட்சியாளர் இருந்தனர். அந்நடைமுறை இந்நாள் வரை தொடரல் கண்கூடு. ஊர் அலுவலர் (Village officer) என்னும் பெயரால் இன்று உள்ளனர்.

ஊராட்சி பார்த்தவர். ஊர்மணியம் எனப்பட்டார். அவர் வைத்தது வரிசை: செய்தது சட்டம்; வரிவாங்குதலா, தண்டத் தீர்வை விதித்தலா, ஊர்வழக்கை முடித்தலா, பிறப்பு இறப்புக் குறிப்பா அவ்வளவுக்கும் அவரே பொறுப்பாளர். மேலாட்சி யாளர் எவர்வரினும் ஊர்மணியத்தைப் பார்த்துத்தான் எதுவும் செய்வார். மணியம் சொன்னதுதான், அரசு சொன்னது. அவர் சொன்னதே காவல்துறை, நீதித்துறைச் சான்றுகள்.

மணியம் ஊரில் 'மணிபோன்றவர்' எனப்பட்டவர்தாம். ஆயினும் ஓட்டை உடைசல்' ‘கீறல்' மணிகள் இல்லாமல் போவது இல்லையே! முறை செய்ய வேண்டிய அவர், முறை கேடராக அமைவதும் தவிர்க்க முடியாததுதானே! அதனால் 'மணியம்' என்பதற்குரிய பொருள் அதிகாரம் செய்தல், முறைகேடாக செய்தல் என்பனவாய் அமைந்தன. அதனால் 'இந்த மணியமெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே” உன்னை யார் மணியத்திற்கு வைத்தது?" என்பன போன்ற வழக்குகள் உண்டாயின. இவ்வகையில் வந்த ஒன்றே 'அட்ட மணியம்' என்பது.

66

ஒரு வேலையை மேற்பார்க்க ஓர் அலுவலன் உள்ளான். அவனே கெடுபிடிக்காரன்; ஈவு இரக்கமில்லாமல் நடப்பவன். அவன் இல்லாப் பொழுதில் அல்லது இருக்கும் பொழுதில் கூட,