உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

155

அவனுக்கும் கெடுபிடி செய்பவனாக ஒருவன் தலைப்பட்டால், அவன் செய்யும் கெடுபிடி எரிச்சலில் பிறந்தது ‘அட்டமணியம்’. 'அவன் செய்யும் மணியத்தைப் பொறுத்தாலும் இவன் செய்யும் அட்டமணியத்தைப் பொறுக்க முடியவில்லை” என்று வெதும்பி யுரைப்பது வழக்காயிற்று.

அட்டமணியம்' என்பது குறுக்கே குறுக்கே புகுந்து வேண்டாத வகையில் -ஏன்? வெறுக்கும் வகையில் அதிகாரம் செய்வதாம். ஊரின் ‘மணி'யெனப்பட்ட பெருமை, வெட்டி அதிகாரப் பொருளுக்கு இறங்கிய இறங்கு நிலைப் பொருள் இது. ஊர் மணியம் பார்த்தவர் 'மணியகாரர்' எனப்பட்டனர் அது குடிவழிப் பெயராய் - ஒரு சாதிப் பெயராய் - இந்நாளில் வழங்குகின்றது. கணக்கு எழுதிய குடிவழியினர் ‘கருணீகர்’ எனப்பட்டது போன்றது இது.

சிற்றூர் கோயில் மடம் முதலியவற்றின் மேலாண்மை செய்பவர் ‘மணியம்' 'மணியக்காரன்' என்று கூறுகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. இம்மணியத்தின் துடிப்பு விளக்கு மாறு, 'துடி மணியக்காரர்' என்கிறது விறலி விடுதூது (1055) ப மணியத்தின் அடாவடித்தனம் புலப்படுமாறு துர்ச்சனர் தமக்கேற்ற மணியம்' என்கிறது அறப்பளீசுரர் சதகம் (49).

அட்டமணியம் பாராட்டால் வெளிப்பட்டது அன்று, பொறுக்கமாட்டா எரிச்சலால் வெளிப்பட்டது. பதவிப் பெயர், பழிப்பெயராயதற்கு இஃதொரு சான்று.

தத்தை

தத்து+ஐ = தந்தை, தத்திச்சொல்வது தத்தை. தத்தை கிளி விட்டில் வகையுள் பருத்த ஒன்று. தத்தித் தத்திச் செல்வதாலும், கிளி போலும் பசுமை நிறம் உடைமையாலும் தத்துக்கிளி எனப்படுகிறது. தத்திச் செல்லுதல் ஒரு விளையாட்டு தாவு தலுக்கு முன்னிலை தத்துதல். 'தத்தித் தாவி' என்பது இணை மொழி. ‘தத்து’ ‘தத்துவாய்மடை' என்பவை உழவடைச்சொல். நீர் தத்திச்செல்வதற்கு அமைக்கப்பட்ட அமைப்பு அது.

தவளை

தவழும் இயல்புடையது தவளை தவளையின் செலவைத் தத்துதல் என்பது வழக்கு. 'தவளை தத்துதல்' என்பதொரு விளையாட்டு. குழந்தை தவழும்போது அதன் கை அமைதி அதன் செல்லுமுறை தவழ்நிலையைத் தெரிவிக்கும். தோற்றத்தால் தவளை அமைதியைக் காட்டும்.

கால்