உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம்

15

'ள'கரம் ழகரம் ஆதலால் பொருள் வேறுபாடு இல்லாமை காள், காழ் என்பதில் காண்க. இரண்டும் கருமைப் பொருளவே. தேரை

தேர் அமைப்பில் தோன்றும் மணல்மேடு 'தேரி' என வழங்கப்படும். கடற்கரைப் பகுதிகளில் தேரியை மிகக் காணலாம். சமநிலமாக இருந்த மணற்படுக்கை ஒரு கடுங் காற்றால் பனையின் கழுத்துக்கு உயர்ந்து தேரியாதலும், இன்னொரு காற்றால் அத்தேரி பழைய நிலையை அடைதலும் இயற்கை. தேரி, மணல்மேடு என்னும் பொருள் தந்தபின் அம்மணல் நிறத்தவளை தேரை எனப்பட்டது, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் தவளை, வெளிப்படக் கிடப்பினும் மணல் க் நிறத்திலேயே இருக்கும். அது மணற்றவளை எனவும் படும். மணலில் வாழ்வதுடன் சார்ந்ததன் வண்ணமாம் நிறமும் பெற்றிருக்கும்.

நுணல்

தேரைக்கு நுணல் என்பது ஒரு பெயர்.

"மணலுள் மறைந்து கிடக்கும் நுணல்.' எனச் சுட்டுவ தொரு பாட்டு. நுணல் என்பதொரு மரம். நுணா என்பது அதன் பெயர். அதன் காய் போல் இருத்தலால் தவளை - மணல் தவளை நுணல் எனப்பட்டது. நுணாமரம் தணக்கு என வழக்கில் உள்ளது. 'தணக்கங்குளம்' என ஓர் ஊர் மதுரையை அடுத்து உண்டு.

பல்லி

66

பல்+இ = பல்லி. தனிக்குறில் முன் வந்த மெய் அதற்கு முன் உயிர் எழுத்து வர இரண்ட ரண்டாகும் என்னும் விதிப்படி "பல்+ல்+இ = பல்லி' யாயது. பல்லியின் நீளத்தையும் அதன் பருமையையும் பார்த்து அவற்றுடன். பல்லின் பருமை நீளம் ஆகியவற்றையும் ஒப்பிட்டுக் கண்டால் எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்து இப்பெயரிட்டுள்ளனர் என்பது விளங்கும். வியப்பும் தோன்றும்.‘பல்லன்’ ‘பல்லாயி என்னும் பட்டப்பெயர் வழக்கும்

நோக்குக.

பாச்சை

பாய்ச்சை

-

பாச்சை,