உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

157

பாய்ச்சல், பாய்ந்து செல்லுதல், தத்துதலினும் தாவு தலினும் விரைந்தது பாய்ச்சல். பாய்ச்சை செல்லும் விரைவைப் பார்த்தால் பெயர்ப்பொருத்தம் விளங்கும்.

பெருக்கு மிக்க நீர், நிலத்தில் படியுங்கால் விரைந்து பரவும். அதற்கும் ‘பாய்ச்சல்' என்பதே பெயர். மூடி விழிக்கு முன் பார் பாய்ந்து விடும். அவ்வளவு பரவிப் பாய்வது அது. பாய்ந்து தாக்கும் மாடு ‘பாய்ச்சைக் காளை’ (பாச்சைக் காளை) எனப் படும். 'பாய்ச்சல் காட்டாதே’ தே' என்பதும் உன்பாய்ச்ச ல என்னிடம் வைத்துக்கொள்ளாதே என்பதும், அவன் பாய்ச்சல் (பாச்சா) பலிக்கவில்லை என்பதும் வழக்குத் தொடர்கள். தாரை மடித்துக் கட்டுதல் ‘தார்ப் பாய்ச்சுதல்' எனப்படும். 'தார்' நீளம்; நீண்ட உடையை யை (காலளவும் தாழ்ந்து கிடந்த உடையை) முட்டளவுக்கு மேலே கொண்டு வந்து கட்டுதல். பாய்ந்து ஓடுவதற்கு வாய்ப்பானது ஆதலால், அதற்குத் தக்கவாறு கட்டுதல் ‘பாச்சை எனப்பட்டது.

விட்டில்

டு>விட்டு+இல்

=

விட்டில்.

இடைவெளிப்பட விட்டுத் தாவுதலால். அவ்வியல் கண் டோர் அவ்வுயிரிக்கு ‘விட்டில், பெயர் தந்தனர். “கூடு விட்டு ஆவிபோதல்' "வேலையை விட்டு விலகல்" என்பவற்றில் விட்டு என்பது விடுபாடு அகலுதல் விலகுதல் பொருள் தருதல் அறிக. புழுப்பூச்சிபோல் ஊர்ந்து செல்லாமல் இடைவெளிப்படத் தாவிச்செல்வதால் ‘விட்டில்' எனப்பட்டது.

விடை

விடை என்பது காளை என்னும் பொருளது. விடைத்தல் என்பது நிமிர்ந்து எழுதல் பொருளது. விடைக் கோழி என்பது உண்டு. சேவலோடு சேர்தற்குக் கத்தும் பருவப் பெட்டையின் பெயரே விடைக்கோழியாம். கோழி விடை என்பதும் வழக்கே. ஊக்கமாகச் செயலாற்றும் இளைஞனை 'விடைப்பான பையன்; என்பதும் வழக்கு. விடைப்பு ‘வெடிப்பு' எனவும் வழங்கும். வெடிப்பானபையன் என்பது அது. வெடி வெடிப்பதுபோல் துடிப்பானவன் என்னும் பொருளது அது.