உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. தண்டு

கீரைவகையுள் ஒன்று ‘தண்டங்கீரை, அல்லது ‘தண்டுக் கீரை’. அதனைக் 'கீரைத் தண்டு' என்பதும் வழக்கே. அது, 'தண்டை' மட்டும் குறிப்பதாம்.

சிறுகீரை, அறுகீரை (அறைக்கீரை) வேளைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை என்பவற்றுள் கீரை பொதுப் பெயராயும், முன்சொல் சிறப்புப் பெயராயும் இருத்தல் தெளிவு. அவ்வாறு நோக்கத், தண்டுக் கீரையின் முதற் சொல்லே சிறப்புப் பெயர் என்பது விளங்கும் தண்டு என்பது எது? அதன் வேரற்ற தூரே தண்டென்க.

சிறுகீரையும் அறுகீரையும் கொடிவகை; தண்டுடையன அல்ல, அவற்றை விலக்கித் ‘தண்டுக்கீரை’ தன்தூர்த்தடிப்பைச் சிறப்பாகக் கொண்டதாம். ‘தண்டி’ தடி அன்றோ!

தண்டுக் கிரைக்கு மட்டுமோ தண்டு நின்றது, தாமரை தண்டு, அல்லித்தண்டு என நீர்க்கொடிக்கு வளர்ந்தது.

'தண்டங்கோரை’ எனக் கோரையுள் ஒன்றற்கு விரிந்தது. 'மூங்கில் தண்டு, நாணல்தண்டு, வாழைத்தண்டு' எனப் பெருகியது.

தண்டு விளக்கு (Tube light) எனப்புத்தாட்சியும் பெற்றது அம்மட்டோ?

மூக்காந்தண்டு, காதுத்தண்டு, முள்ளந்தண்டு என்று உடல் உறுப்புகளுக்கும் தாவியது. காதில் போடும் ‘தண்டொட்டி, யொடும்கூட ஒட்டிக் கொண்டது. நிலைத் திணையின் (தாவரத்தின்) அடிப்பகுதியாம் 'தண்டு, 'தண்டி என்னும் கனப்பொருளும் தந்தது; தடி என இடைக்குறையாகி வேப்பந்தடி, தேக்கந்தடி எனவும் வழங்கலாயிற்று. ‘ஊன்தடி’ என்றும் ஊன்றியது, தடி. 'தடிப்பு' என வளர்ந்தது. தோல் தடிப்பு வலுத்து உள்ளத் தடிப்புக்கும் இடந்தந்தது. 'தடிமன், தடுமன், தடுமம்' என மூக்குத் தடிப்பு நோய்ப்பெயரும் ஆயிற்று தடி, தடியன் தடிச்சி என உவமையால் குறியீட்டுப் பெயரும் ஆயது. தடி, தடிதல்