உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

159

(வெட்டுதல்) அகற்றுதல் என்னும் வினைக்கு மூலமும் ஆயது, தண்டு தட்டு ஆகித் தட்டையும் ஆயிற்று. தடி இவ்வளவில் நிற்கத், தண்டுக்குச் செல்வோம்.

தண்டு, தடி அல்லது கோல் என்னும் பொருளில் வளர்ந்தது அன்றோ! தளர்நடைமுதியர் தண்டூன்றிச் செல்லுதல் வழக்காயிற்று. 'தண்டுகால்' ஊன்றிச் செல்லும் முதியனை மணிமேகலை உரைக்கும். 'தொடித்தலை விழுத் தண்டினைப் புறப் பாடல் விளக்கும்.

தொடியாவது வளைவு; வளையலுக்குத் ‘தொடி’ என்னும் பெயரும் ‘வளையல் தொடுத்தல்' என்னும் வழக்கும் உண்மை அறிக. 'தொடுவை' என்னும் கருவி வைக்கோல் திரட்டுதற்காகக் களப்பணியாளர் கையகத் திருப்பதும் அறிக. வளைந்த தலையை அல்லது உச்சியை உடைய தண்டு (கம்பு) தொடித்தலைத் தண்டாம். அது கால்போல் பயன்தந்து தளர்ச்சி நீக்கும் தகவு நோக்கி விழுத்தண்டு (சிறந்ததண்டு) எனப்பட்டதாம்.

'தொடித்தலை விழுத்தண்டு' என்று ஆட்சி செய்த புலவர் பெயரை ஒழியவிட்ட புலவர் உலகம். அவர்தம் சொல்லாட்சி கொண்டே அவர்க்குப் பெயர் சூட்டிப்போற்றி வைத்தமையால் 'தொடித்தலை விழுத்தண்டினார்' என்றொரு புலவரை நாம் அறிய வாய்த்ததாம்.

'தண்டு' (கோல்) கொண்டு போருக்குச் செல்வது பண்டை வழக்கு ஆதலால், 'தண்டு'க்குப் படை என்னும் பொருள் உண்டாயிற்று. படைத்தலைவர் ‘தண்டநாயகர்' எனப்பட்டார். 'தண்டடித்தல்' என்பது படைஞர் பாளைய மிறங்குதலாயிற்று.

"போரின்மேல் தண்டெடுக்க” என்பதும் (382) தண்ட நாயகர் காக்கும்” என்பதும் (386) கலிங்கத்துப்பரணி.

இனி, வரிவாங்கச் செல்வார் 'தண்டு' கொண்டு சென்றனர். தண்டு கொண்டு வரிவாங்கியதால் ‘வரிதண்டுதல்’ என வழக் காயிற்று. அதனை வாங்குபவர் ‘தண்டலர், ‘தண்டற்காரர்’ எனப்பட்டனர். அவர்கள் தலைவர், ‘தண்டல் நாயகர்’ ஆனார்.

'தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன்' என்னும் பழமொழியும் 'தண்டல் நாயகர்' என்னும் கல்வெட்டு மொழியும், மாவட்ட ஆட்சியாளரைத் 'தண்டல்நாயகர்' என வழங்கும் மொழியாக்கமும் கருதத்தக்கன. வரி ‘தண்டு’ தற்கு ஆள்வருகிறது; அவரவர் வரியைச் செலுத்துக - என்பதற்கு அடையாளமாக அறையப்பட்ட பறை ‘தண்டோர் தண்டோரா