உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம்

15

எனப்பட்டது. ‘என்ன தண்டோராப் போடுகிறாய்? என்பது இன்றும் வழங்கு மொழி.

வரிகட்டுதற்கு மறுத்தாலோ, குற்றம் செய்து எதிரிட்டாலோ அவரைத் தண்டால் (கோலால்) மாட்டுவது (அடிப்பது) வழக்கமாக விருந்தது. அதன் வழி வந்ததே தண்டனை! பின்னர்ச் சிறையடைப்பும், பொருட்பறிப்பும் பிறபிறவும் தண்ட பொருளில் வளர்ந்தன.

'கடுமொழியும் கையிகந்த தண்டமும்'

என்பது திருக்குறள்

(567)

“தண்டமும் தணிதி பண்டையிற் பெரிதே"

என்பது புறம் (10)

-

னைப்

தண்டு எடுத்தவனின் கொடுமைக்கு அஞ்சிக் கொடுத்த கொடுமை ‘தண்டத்துக்கு அழுதல்' ஆயிற்று! தடியனுக்குப் போடும் வெட்டிச் சோறு- போடா விட்டால் எதுவும் செய்வானே அதனால் ‘தண்டச்சோறு' எனப்பட்டது. தடியனுக்கு அஞ்சி வணங்கியதே 'தண்டனிடுதலாய்த் தெண்டனிடுதலாய்’ வழங்கி. இறைவழி பாட்டுக்கும் ஏறியது. தடியன் என்பான் தடியுடையவனும், தடித்தவனும் தானே. தடி என்பது ஊன் ஆதல் ‘ஊன் தடி பிறப்பினும்' எனவரும் புறப்பாட்டால் புலப்படும் (74).

‘தண்டி' என்பதோர் பெயர்! தண்டித்தவர் பெயரே 'தண்டி’யாயிற்று. அவரே தண்டியடிகள் நாயனார் என்பார். தந்தை தாளறத் தண்டித்தவர் அவர். 'தாளறத் தண்டித்த தண்டி என்பது சிவரகசியம். (பாயிரம். 7)

தண்டு கொண்ட வன் ‘தண்ட தண்டன்' எனப்பட்டான். அப் பெயராலே மாந்தர் பலர் இன்றும் உளர். தண்டும் அதனொடு வேலும் கூடிய படைக்கலம் தண்டு, தண்டம் எனவும் பட்டது. தண்டாயுதம் என்பது தென்மொழி வட மொழியாம் இரு மொழிப் பிறப்பி! அவற்றின் வழிப் பட்டனவே தண்டாயுதன், தண்டபாணி என்னும் முருகன் பெயர்கள். 'தண்டுமாரி' என்னும் அம்மை பெயரே அதன் பொருள் விளக்கம் புரிவிக்கும். அப்படியே தண்டு விநாயகர் என்பதும்.

தண்டு படைக்கருவியாக மட்டும் நின்றுவிடவில்லை. தண்டுவலித்தல் படகுக்கு உண்டன்றோ! தண்டு தானே குயக்