உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

161

கலம் செய்தற்குச் சுழற்றுகோல்! தேர் உந்துதற்கு ஆகும் சவள மரம் ‘தண்டு கோல்' எனப்படுவதே. வில்தண்டு, வீணைத்தண்டு, சமன்கோல் (தராசுத்) தண்டு, காவடித் தண்டு என்பவை பல்வேறு பயன்தண்டுகள். ஆணுறுப்பும் தண்டென வழக்கில் ன நின்றது. இரட்டை (மிதுனம்) என்னும் விண்மீன் தோற்றம் தண்டுபோல் இருத்தலால் அது ‘தண்டு’ எனப்படும்.

மூங்கில் தண்டு முகத்தல் அளவு கருவியாகவும் ஒருகால் பயன்படுத்தப்பட்டது. ஒரு கணுவுக்கு அடியிலும் அதன் மேற் கணுவுக்கு அடியிலும் அறுத்துத் 'தூக்கு' ஆக்குவதும் பழவழக்கு. அத்தண்டு, கூழும் கஞ்சியும் கொண்டு செல்லப் பயன்படுத்திய வழக்குண்டு. 'மதுப்பெய் தண்டும்' இலக்கிய ஆட்சியில் உண்டு.

மூங்கில் தண்டு கொண்டு செய்யப்பட்ட ஊர்தி ‘தண்டிகை’ யாயது. அது, வள்ளுவர் காலத்தில் 'சிவிகை’ எனப்பட்டது. 'தண்டிகைக் கனகராயன் பள்ளு' என்பதொரு சிற்றிலக்கியம். தண்டிகை செல்வச் செருக்கர் ஊர்தியாக இருந்ததும், துறவு மடத்தர் ஊர்தியாக இருந்ததும் இந் நூற்றாண்டின் தொடக்கத் திலும் கண்டது.

‘கம்புப் பொருளில் இருந்த தண்டு, ‘கம்பிப்' பொருளும் தருவதாய் விரிந்தது. அப்பொழுது கரும்பொன், செம்பொன், வெண்பொன் முதலிய முதலிய 'கனிமக் 'கனிமக் கம்பியும் தண்டாகவும், தண்டின் திரிபாகவும் வழக்கில் ஊன்றியது விளக்குத் தண்டு' பழமையானதே.

வள்ளுவர் வாய்மொழியை விளக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது 'வள்ளுவமாலைப்' பாட்டொன்று. “அறம். தகளி; பொருள், திரி, இன்பு, நெய், சொல், தீ; குறட்பா. தண்டு” என்கிறது அது.

'திருகிப் பொன்னெடுந் தண்டில் திரண்டவால்' என்னும் கம்பர் தொடரால் பொற்கம்பி தண்டெனப்பட்டதை அறியலாம். (சுந். 1193)

கோட்டை வாயில்களின் உட்காப்பாகப் பரிய தடிகளைக் குறுக்கிட வைப்பது பண்டைவழக்கு. துளையிட்ட பரிய தூண்கள் இருபாலும் நிறுத்தி, அதன் துளைக்குள் தடியைச் செருகி வைத்த அந்நடை முறையே இந்நாள் கதவுகளில் அமைக்கும் அடிதண்டா”வுக்கு மூலம். இரும்புப் பட்டை தானே அடி

தண்டா!