உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம்

15

நெடிதாகவும் வலிதாகவும் செய்யப்படுவதும், தொடர் வண்டி யோடுதற்கு வழியாய் அமைக்கப்படுவதும் ஆகியது 'தண்டவாளம்’ ‘தண்டவாலம்' என்னும் பெயரே தண்டவாளம் ஆயிற்றாம். வாலம் - நீளம்; வால் - நெடியது, நெடிய கிழிவு ‘வாலமாகக் கிழிந்த’தெனக் கூறப்படும். நீண்டு குறுகிய நிலம் ‘வாலம்' எனப்படும். குரங்கு முதலியவற்றின் வாலையும், வாலி என்னும் பெயரையும் கருதுக.

குழந்தைகளுக்கு மெல்லிய கம்பி வளையத்தைக் காலில் போடுவதும், சற்றே பெரிய குழந்தை ஆனபின் அதனைக் கழற்றி விட்டுத் ‘தண்டை' போடுவதும் அறிக.

பருப்பொருளால் விரிந்த தண்டு, கருத்துப்பொருளாம் நுண்பொருளாயும் விரிந்தது.

தண்டின் செயல் அலைத்தலும் அலைக்கழித்தலுமாகலின் தண்டுக்கு அப்பொருள்கள் உளவாயின.

'பராரை வேவை பருகெனத் தண்டி' என்பது பொரு நராற்றுப்படை. இதில் வரும் ‘தண்டி என்பதற்குப் ‘பல்கால் அலைத்து' எனப்பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். 'தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ' என்னும் மலைபடுகடாத்தின் தண்டிக்கும் அப்பொருளே அவர் கூறினார்.

தண்டுதலாம் அலைத்தலால் நீங்குதல் உண்டாம். அதனால் “யான் தண்டவும் தான் தண்டான்" என்னும் புற நானூற்றின் தண்டுதல் நீங்கல் பொருளில் வந்தது (384). 'தண்டாநோய்’ என்பது இப்பொருளில் வந்த திருக்குறள் (1171).

தண்டுடன் தண்டு மோதுங்கால் அது போர்தானே! ஆதலால், ‘போர்ப்' பொருளும், போரிடுவார் பகைவர் ஆதலால் பகைப்பொருளும் உண்டாயின.

“தண்ட லில்லாது உடன்கூட்டல்” என்பது கூர்ம புராணம் (சூத 33).

“தாள்நிழல் நீங்கிய தண்டலர்” என்பது சேதுபுராணம்

66

(மங்கல. 8)

"தண்டாது இரப்பினும்” என்று தொல்காப்பியர் கூறியது போல் (பொருள். 99).

தண்டாது பெருகுவது தண்டுபோலும்!