உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. திருவின் திரு

பெயர்ச் சுட்டு வேண்டாப் பெருஞ்சுட்டுப் பேராசிரியப் பெருமகனார் ஒருவர் முன்பு திகழ்ந்தார்! பேராசிரியர் என்பதே அவர்தம் பெயர்.

அப்பேராசிரியப் பெருந்தகை, இணையற்ற பேராசிரிய ராகவே திகழ்ந்தார். அத்திகழ்வு, முற்றிலும் நம் கையகத் தகப் படாதொழிந்தன வெனிலும், கிடைத்தவை அவர் பேராசிரியரே என்பதை நிறுவவல்லவையாம்! அவை எவை?

தொல்காப்பியப் பின்னான்கியல்களாம் மெய்ப் பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என்பவற்றுக்கு அவர் விரித்த உரை; திருக்கோவையார்க்கு அவர் அருளிய உரை என்பவை அவை!

பெறலரும் அப்பேராசிரியப் பெருந்தகை தரும் ‘திரு விளக்கம் பெரு விளக்கம்! அருவிளக்கம்! அப்படியொரு விளக்கம் அப்பேராசிரியரையன்றி எவரே அருளினார்?

“திருவென்பது பொருள் உடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலும் இன்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி அது வினையுள் உடைமை எனப்படும்” என்பது தொல்காப்பியத்தில் வரும் விளக்கம். (பொருள். 273)

'திரு' என்பது செல்வம் என அமையாமல், திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி என்கிறாரே பேராசிரியர்! “செல்வம் என்பது சிந்தையில் நிறைவே” என்னும் குமர குருபர அடிகள் தெளிவுக்கு மூலவர் இப்பேராசிரியரோ?

“வினையுள் உடைமை' என்பது என்ன செறிவு! என்ன செட்டு' என்ன செழுமை! தீவினையால் இன்மை எய்தினும் உடை யவன் போல் இருக்கும் ஒள்ளிய உள்ள நிலையே அஃ தன்றோ! எண்ண எண்ண விரியுமே-இனிக்குமே - பேராசிரியரின் இத்திருவுரை! இனிக் கோவையாரில் வரும் திருவுரைதான்

என்ன?