உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் – 15

"திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு; இஃது என் சொல்லியவாறோ? எனின், 'யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப்பொருள்மேல் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு! அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல்! அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகை யானும் பிறிது ஒன்றற்கு ல்லாமையால் திருவென்றது அழகுக்கே பெயராயிற்று! அங்ஙனம் ஆயின் இது செய்யுளின் ஒழிய வழக்கினும் வருவது உண்டோ? எனின், உண்டு; கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும். அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத் தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது ஆதலானும் திரு வென்பது ‘அழகு' என்றே அறிக. அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மைநோக்கமோ என்பது அது.

‘திருவளர் தாமரை' என்பதில் வரும் திரு விளக்கம் இது! திருமகள் வளர்கின்ற தாமரை என்ற அளவில் பொருள் கொள் வாரைத் தெளிவிக்க உரைக்கும் தேர்ச்சியுரை இது. கண்டாரால் விரும்பப் பெறும் பேறாம் தன்மை யாங்குண்டோ ஆங்குண்டு திரு என்றாராம்!

இனி ‘அகரவரி'கள் திருவுக்கு என்ன பொருள்களைத் தருகின்றன?

அழகு, ஒளி, கணி (சோதிடம்), சிறப்பு, செல்வம், தலையில் சூடப்படும் ஓரணி, தாலி, திருமகள், தெய்வத் தன்மை, பெண், பேறு, பொலிவு, நல்வினை, மங்கல மொழியுள் ஒன்று - என்பவை அவை தரும் பொருள்களாம். இத்தகு வளத்திருவைக் கண்டோர் வாளாவிடுவரோ? திருவைக் கொஞ்சிக் கொஞ்சிக் குலவினர்; கொண்டாடினர்!

திரு இருவகை வழக்குகளிலும் பெறும் சிறப்புகளைக் காண்க:

சொல்வகை

திருமுன்னடைச் சிறப்புச் சொல்

திரு பின்னடைச் சிற்ப்புச் சொல் திரு முன்னும் பின்னுமாம்: அடைச்சிறப்புச் சொல்

எடுத்துக்காட்டு

திருமிகு, திருத்தகு.

உயர்திரு, தவத்திரு.

திருப்பெருந்திரு,

திருவார்திரு.