உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

தமிழ் வளம் என்பது வளர்பொருளாய் அமைவது. உண்டியல் தொகையையோ வங்கி வைப்பையோ பண்டக சாலைப் பொருளையோ கணக்கிடுவதுபோல் அறுதியாகக் கணக்கிட்டுச் சொல்வது போன்றது அன்று அது.

வான் மீனைக் கணக்கிட வல்லாரும் கடல் மீனைக் கணக்கிட மாட்டாமை போல நொடி நொடியும் வளரும் வளச்சொல் பெருக்கினது தமிழ்.

இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வழங்கும் சொற்கள் இன்னும் முற்றாகத் தொகுத்து முடிக்கப்படவில்லை.

உருவாக்கப் பட்டுள்ள கலைச் சொற்களையும் இத்தனை ஆயிரமென அறுதியிட்டுரைக்க முடியவில்லை.

வட்டார வழக்காக உள்ள சொற்களைத் தானும் தொகுத்துக் கணக்கிட வகையில்லை.

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள் கல்வெட்டுகள் சடங்குவகைச் சொற்கள், குழூஉக் குறிகள், ஆட்டக்களச் சொற்கள் இன்னவாறாக விரியும் பரப்புச் சொற்களை எண்ணிக்காண வகையில்லை.

வழக்கு வீழ்ந்த சொற்கள், வழக்கில் புகும் சொற்கள் என்பனதாமும் அறுதியிடப் பெறவில்லை.

தமிழ் மூலத்தின் தடம் எங்கெங்கெல்லாம் பதிவாகி எவ்வெம் மொழிவளமாய் இலங்குகின்றன. என்பதையும் உறுதிப்படுத்தும் முழுப்பணி இயலவில்லை.

தமிழகம் தவிர்த்துத் தமிழர்வாழ் ஞாலப் பரப்பளவில் அவர்கள் பெருந்தக்க வாழ்வோடு வாழ்வாக வளர்ந்து வளம் பரப்பிக் கொண்டிருக்கும் சொற்களை இணைத்துக் கொள்ளும் இன்றியமையா முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

எதனை நோக்கினும் முழுமையுறக் கணக்கிட்டு வளமாக்க மாட்டா வறுமுயற்சித் தமிழராட்சியும் தமிழறிஞர் செயற்பாடும்,