உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

3

தமிழுக்கு உதவாத் தமிழ் நாட்டுச் செல்வர்களும் மல்கியுள்ள ஏனோ தானோ'த் தமிழகத்தில் தமிழ் வளம் தேனானால் என்ன, பாலானால் என்ன, தீம்பாகு ஆனால் என்ன; இருந் தொழிய வேண்டியதே!

ஈடிணையில்லா வளமொழியாகத் தமிழ் வாய்த்திருந்தும், எம்மழலைப் பள்ளிக்குள்ளும் எம்மொழியை நடையிட விட மாட்டோம் என்னும் ‘நல்ல தமிழர்' நாட்டாண்மையில் நாடு வேட்டைக் காடாக இருக்கு மட்டும், தமிழ் வளம் என்பதெல்லாம் வாய்ப்பந்தலாகவே அமைந்துவிடும். ஆனால், காலம் மாறும்! அதுகாறும் காலப் பழமையொடு ஞாலமுழுப் பொருளாகத் திகழவல்ல தமிழ் வளத்தை அவரவர் திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் எழுத்தாலும் பேச்சாலும் பரப்பிக் கொண்டிருத்தல் கடமையாம். அவ்வகையில் தோன்றுவதே 'தமிழ் வளம் - சொல்' என்னும் இச்சுவடியாம்.

இந்நூலளவில் தமிழ் வளம் அமையுமா? அமையும் என்பது கையளவு வைத்துள்ள இலையால், கானகப் பரப்பு லைகளை யெல்லாம் அடக்கிவிட்டதாகக் காட்டுவது போலும் போலிமைக் காட்சியாகவே முடியும். என் எளிய முயற்சியால் இடையீடு இல்லாமல் எழுதிவைத்துள்ள தமிழ் வளத்தில் பத்தில் ஒரு பங்கு தானும் இத்தொகுப்பில் இடம் பெற்றிலதே என்னும் உண்மை ஒன்றே, நம் மொழித் தொண்டர் நிலையை வெளிப்படுத்த வல்லதாம்.

அக்கப்போர், அங்கணம், அட்டக்கரி, அட்டகாசம், அடை என்பன முதலாக அகர நிரலில் கட்டுரைகள் அமைக்கப்பட்டுள. இவையெல்லாம் பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டுத் தொகையாக்க முற்றவை.

இதழ்களில் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை என்ப வற்றில் வெளிப்பட்ட கட்டுரைகளே மிகப்பல, மலர்களில் சில டம் பெற்றன. கட்டுரைகள் எல்லாமும் சொல்லாய்வு வழிப் பட்டவை ஆகலின் ‘தமிழ் வளம் - சொல்' என்னும் பெயர் பெற்றது. இதற்குப் பின்வர வேண்டிய ‘தமிழ்வளம் - பொருள்’ முன்னரே வெளிப்பட வாய்த்தது. பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள வரவேற்பு ஈதெனக் காட்டும் போலும்.

இச்சொல்வளக் கட்டுரைகள் இயற்கை ஒலிக் கொடையாம் உயிரிகளின் ஒலிப்பு வழியே உருப்பெற்றுத் திருப்பெற்று ஒன்று