உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பத்தாய் நூறாய்த் திகழும் நெற் பயிர்க்கிளைப்பெனப் பெருகியவை உண்டு.

வேரடிச் சொல் ஒன்றன் வழியே கிளர்ந்து மூங்கிற் பண்ணையெனப் படர்ந்து பணைத்து ஓங்கி உயர்ந்தவை பல

உண்டு.

தாய் மண்ணின் மணத்தொடு பிறந்து, தாய் வாயின் வளமாக வாய்த்தும், சின்னஞ்சிறு மாற்றங்களைப் புகுத்துவார் புகுத்தியமையால் புலமையாளரும் மயங்கி வேற்றுச் சொல்லெனக் கண்டும் கொண்டும் ஒதுக்கி வைத்த தமிழ்வளச் சொற்களும் உண்டு.

வழூஉச் சொல்லாகத் தோன்றினும் தமிழ்வளமாகத் திகழும் சொல்லை அடையாளம் காட்டி ஆக்கப்படுத்திய ஆய்வும் உண்டு. அவ்வாறே பிழைவழக்கைச் சீராக்கும் சீர்த்தியும் உண்டு. கொத்துக் கொத்தாய்க் குலை குலையாய்த் திகழும் இயற்கைக் கொடைபோல, இயற்கை ஒலியும் இயற்கை வடிவும் இயல்நெறிப் பொருளும் கொண்டு இலங்கும் பெருவளக் குவையும் இவ்வாய்வில் உண்டு.

இச்சொல்லாய்வைப் பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சான்றுகளைக் கொண்டு மெய்ப்பிப்பதுடன், பழமொழிகள் வழக்காறுகள், மரபுத் தொடர்கள், இணைச் சொற்கள், அணிகலங்கள், ஆடல்கள் புத்தாக்கங்கள் இன்னவற்றால் மெய்ப்பித்ததுண்டு.

அகர முதலிகள், நிகண்டுகள், உரைகள் இன்னவற்றின் துணையால் ஆய்வைத் தட்டிக் கொட்டிப் பார்த்து நிலைப் படுத்தப் பட்டவையும் உண்டு.

அடை என்பதோர் ஆய்வுக்கட்டுரை. அதில், ‘அடை’ என்னும் முதனிலை, ஏவல் அளவில் ஆய்வு நிற்கவில்லை.

அடைக்காய்

அடைப்பை

அடைக்கத்து

அடைக்கலம்

அடைப்பைக்காரன்

அடைக்கலாங்குருவி

அடைப்பைத் தொழில்

அடைக்கோழி

அடைவு

அடைமொழி

அடையாளம்

அடைமண்