உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

177

நட்பியல் பகையியல் என்பவற்றை ஏரண முறையில் அல்லது இயற்கையொடு பொருந்திய அறிவியல் முறையில் ஆய்ந்து முந்தையோர் குறியீடு செய்துள்ளமை கொள்ளை மகிழ்வு தருவதாம். இதனை அறிந்து மகிழுமாறு நட்புப் பொருட் சொற்களையும் பகைப் பொருட் சொற்களையும் பட்டியலிட்டு இவண் சுட்டப்படுகின்றனவாம்.

தமிழிற் சொற்பஞ்சம் இல்லை! அவற்றைத் திரட்டி ஒழுங் குறுத்திப் போற்றாப் பஞ்சமே வழிவழி வாடாமல் வாய்த்துக் கொண்டிருக்கின்றது. சருக்கரை ஆலையாளனுக்குச் சருக்கரை நோய் வந்ததைப் போல்வது இது!

நண்பர்

அகத்தர்

அகம்பர்

அகர்

அகவர்

அடங்கினார்

அடுத்தார்

அடைந்தார்

அண்டினார்

அணுக்கர், அணுகினார்

அமர்ந்தார்

அரியலர்

அருகர்

இகலார், இகலிலர்

இசைந்தார், இசையுநர்

இணைந்தார்

இயலுநர், இயன்றார் இனியர்

I

|

|

|

பகைவர்

புறத்தர்

புறம்பர்

பரர் புறவர்

அடங்கார்

அடுக்கார், அடாதார்

அடையலர், அடையார்

அண்டார்

அணுகார், அணுகலர்

அமரார்

அரிகள், அறிஞர்

அருகலர்

இகலினார், இகலோர்

இசையார், இசைவிலார் இணையார், இரிஞர்

இயலார், இயலாதார்

இன்னார்