உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

படபடப்பு

படர், படர்தல்

பரண்டுதல்

பருத்தல் பழுத்தல்

பளபளத்தல்

பற்று

பாரித்தல்

பிசுபிசுத்தல்

பிடித்தல், பிடிப்பு

பிடுங்கல்

பிதற்றல்

இளங்குமரனார் தமிழ்வளம் 15

நெஞ்சப் படபடப்பு;

பித்தப்

படபடப்பு. படக்குப் படக்கென மார்புத்துடிப்பு அடித்தல்.

தோல் நோய் விரிதல். தேமல் படர்தல், கண்ணில் மாசு படர்தல்.
வயிறு பரண்டுதல், சொறியால் தோல் பரண்டுதல்.

பரு உண்டாதல்.

சிலந்தி சிறங்கு ஆகியவை நீர்கோத்து முதிர்தல். கண்படலத்திரை முதிர்தலும் பழுத்தலாம்.
பழுத்த கட்டி நீர் கோத்தலால் பளபளப் போடு தோன்றுதல். படை உண்டாதல், நோய் தொற்றுதல். “பற்றும் படையும் " பற்று பத்து. பற்றுப் போடுதல்.
நீலம் பாரித்தல், நீல நிறமாகப் படர்தல். நஞ்சு குருதியில்

படர்தலால் உண்டாகும் நிறமாற்றம்.

வியர்வை கொட்டலால் ஈரப்பதனும் நெடியும் இருத்தல்.
தடிமம் பிடித்தல், சுளுக்குப் பிடித்தல், பேய் பிடித்தல். "பேய் பிடித்திடு தூதரே” இடுப்புப் பிடித்தல், 'சே என்றானாம் இடுப்புப் பிடித்துக் கொண்டதாம்."
பாம்பு பிடுங்கல், பல்லைப் பிடுங்கல்.
சஞ்சலத்தால் ஒன்றிருக்க ஒன்று கூறல்.