உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம்

15

பெருக்காறு ஆயிற்று; முன்னூற்றைத் தாண்டியமை வியப்பாயிற்று. பொழிவு காற்றொடு போய் விட்டால் உழைப்பின் பயன் என்ன? அவற்றைப் பட்டியலிட்டு 'வளரும் தமிழ் உலக' மாதிகைக்கு விடுத்தேன். முழுதுற அதில் வெளிவந்தது.

‘நீரி’ என்பது சித்தர் ஒருவர் வழங்கிய கொடை அதனை எண்ணிய எண்ணம், 'ஊரி,யைத் தூண்டியது. கல்லூரி, அகடூரி என்பவை மின்னின. 'சேம அச்சு, என்னும் பழஞ்சொல் எத்தனை எத்தனை கலைச் சொற்களுக்கு மூலமாகத் திகழ்கின்றது!

கல்லில் இருந்து தோன்றிய கலை ஆய்வு, சொல்லில் இருந்து சுரங்கமாகத் திகழும் மாண்பைச் சுடர் விட்டுக் காட்டுதல் எத்தகைய பேற்றினது!

தொல்காப்பியனார் குறிக்கும் 'தொகுத்தல்' ஒன்றைச் செய்தாலே தமிழ்வளம் துலங்குதல் உறுதியாம்.

'நோய்வினைகளை எண்ணுவார், தொகுப்பு வளம் தமிழ்த் தோப்பாகத் தெரிதலைப் போற்றுவார். அதில் வரும் ‘ல’கரப் புள்ளியெழுத்துகளாலேயே அச்சிடலும் அருமையாயிற்று. பிற நூல் அச்சீட்டுக்கும் சொல்லாய்வு நூல் அச்சீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அது நன்கு வெளிப்படுத்தும். அவ்வகையில் பொறுமையாகவும் பொறுப்பாகவும் அச்சிட்ட 'வேமன்' அச்சகத்தார்க்கு நன்றியுடையேன். அச்சு அடுக்குவார். அச்சு அடிப்பார் எனத் தனித்தனி என்ன! தொழிற் குடும்பத்திலும் பொதுமைச் சுட்டுத்தானே பெருமைச் சுட்டு! அதனைத் தொண்டுக் குடும்பம் மறக்கவோ செய்யும்?

தனித் தனிப் பூவாக மணக்கப் பரப்பிய இதழ்களை மறக்க முடியுமா? அவைதானே இச் சொன்மாலைத் தொகைக்கு மூல பண்டாரம்!

66

வாராது வந்த மாமணியென ஓர் அரிய மதிப்புரை வாய்ந்தது. செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்த வள்ளல் பாரி பற்றிய கட்டுரை அது. அதனைப்பார்த்த பாவாணர் நுங்கள் பாரியைப் பார்த்தேன்; முற்றும் சரிதான். என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப்போலவே சொற்பிறப்பு அமைப்பீர்கள்” என்று வரைந்த அஞ்சல் தனிப்பெரும் பட்டயம் அன்றோ! அந்தமொழி ஞாயிற்றை வணங்கிப் போற்றுகிறேன்.

பலகாலத்துப் பல இதழ்களில் வெளிப்பட்ட இக் கட்டுரைகள் நூலாக்கம் பெறும் போது சிற்சில சொற்களும்