உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம்

நண்பகல் - நடுப்பகல் பொழுது

15

நரை இருள் – நிலவொளி இல்லாத இளவொளிப்

பொழுது

நள்ளிரவு - நடு இரவுப்பொழுது

நாள் - பகற்பொழுது; ஒரு பொழுது

நிமிட்டு - விரலை நிமிட்டும் பொழுது

நிமையம் - கண்ணிமைக்கும்பொழுது

நிலை –

வரம்பிட்ட பொழுது

நுட்பம் கால அடிப்படை அலகுப்பொழுது

நேரம் - நேர்ந்துகொண்ட பொழுது

நொடி - கைவிரலை நொடிக்கும் பொழுது

பகல்

கதிருள்ள பொழுது

படு ஞாயிறு -கதிர் மறையும் பொழுது

பதம் - பக்குவமான பொழுது

பருவம் இயற்கை திரண்டு நிற்கும்பொழுது

பாணி

இனிய பொழுது

பால் – பகல் பொழுது

பானாள் - நடு இரவுப்பொழுது, நடுப்பகற் பொழுது, பாதி நாட்பொழுது

பிதிர் - கையுதிர்க்கும் பொழுது

பிற்பகல் - உச்சிக்குப் பிற்பட்டபொழுது

பின்னந்தி - அந்திக்குப் பிற்பட்ட பொழுது

பின்னிரவு - நடுயாமத்துக்குப் பிற்பட்ட பொழுது

புலர் காலை

புலரி

விடிகாலைப் பொழுது

விடியும் பொழுது

பொழுது – பொதுமை சுட்டும் பொழுது

போது, போழ்து - பூமலர்தலால் குறிப்பிட்டபொழுது

மங்குல் - மங்கிவரும் மாலைப்பொழுது