உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

மருண்மாலை - இருள் பெருகி வரும் மாலைப்பொழுது

முழுத்தம் முழுமதிப்பொழுது, மணப்பொழுது

முற்பகல் - உச்சிக்கு முற்பட்ட பொழுது

முன்னந்தி – அந்திக்கு முற்பட்ட பொழுது

முன்னிரவு - நடுயாமத்துக்கு முற்பட்ட பொழுது

யாமம்

நள்ளிரவுப் பொழுது

வாரம் ஏழுநாள் கொண்ட பொழுது

விடியல் - இருள் விலகும் காலைப் பொழுது

விடியற்காலை இருள் விலகிக் கதிர் காலூன்றும் பொழுது

வெள்ளந்தி -கதிர் கிளர்ந்து ஒளி செய்யும் காலைப் பொழுது

வெள்ளுவா

முழுமதிப்பொழுது

வெள்ளென -கதிர் வெளுக்கும் பொழுது

வேலை விரிந்தபொழுது

வேளை

வைகல்

விரும்பும்பொழுது

இருள் தங்கியுள்ள காலைப் பொழுது

வைகுறுவிடியல்

விடியலுக்கு முந்திய கருக்கல் பொழுது.

வைகறை இருளை அறுத்த காலைப் பொழுது

வைகுபுலரி விடிபொழுதுக்கு முன்னிருள் பொழுது

227

வைகுபுலர் காலை வைகுபுலரிக்கும், காலைக்கும், இடைப் பட்டபொழுது.