உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. முதனிலையும் முழுநிலையும்

ஒரு சொல்லின் முதனிலை தனிச்சிறப்பினது. அது. முதல் இடத்தில் நிற்பதுடன் முதன்மை பெற்றதுமாம் கல்லூரி முதல்வர், மாநில முதல்வர் என்னும் பதவிச் சிறப்புகள் முதலானதுடன் முதன்மைச் சிறப்பும் காட்டுவனவாம். முதலாம் தன்மையே முதன்மை என்க.

முதனிலை அளவில் அமைந்ததும் ‘சொல்’லாம் எனின், அச்சொல்லின் முழுநின முழுநிலைச் அம்முதனிலையிலே

சிறப்பு

அடங்கியிருத்தல் கூடும் அன்றோ!

‘முதல்' என்பதற்குரிய 'பொருள்' என்னும் பொருளும் முதலின் முதன்மைச் சிறப்பை வெளிப்படுத்தும்.

'முதலாளி' என்பது வழக்குச் சொல். 'முதலிலார்க்கு ஊதியம் இல்லை' என்பது வள்ளுவம். 'ஊதியம் இல்லை யாயினும் ஒழியட்டும்; முதல் ஒழிந்து விடக் கூடாது' என்பது சிந்தாமணி.

உள்ளம், உயிர் என்பன முதன்மையானவையே. எனினும், இவற்றினும் முதன்மையானது உடல். அவ்வுடல் இல்லாக்கால் உள்ளம் எங்கே? உயிரின் உறைவு எங்கே? ஆதலால் ‘உடல்’, 'முதல்' எனப்படும். 'முதலும் சினையும் என்பது என்பது தொல் காப்பியம் (சொல். 89) சினையாவது உறுப்பு.

மரம் செடி கொடிகளின் வாழ்வும் வளமும், வேரைக் கொண்டதே. அவ்வேர், 'முதல்' எனப்படும். கிழங்கும் ‘முதல்’ எனப்படும். அம்மட்டோ! உலகம் தோன்றுவதற்கு முதலாம் இயற்கை அல்லது இறையும் 'முதல்' எனவேபடும்! 'மூவா முதலா' என்பன சிந்தாமணியும், திருவாசகமும்

(கடவுள் ; 27, 10)

சொல் முதலாம் முதனிலையில் சொல்லின் முழுநிலை

இருப்பதை இனிக் காண்போம்.