உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

229

கூட!

கேளிர்: இச்சொல், பழஞ்சொல்; பழகிப்போன சொல்லும்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்னும் கணியன் பூங்குன்றனார் உரை இக்கால் மிகப் பரப் பானதே, ‘கேளிர்' என்பதில் முதல் நிலை எது, ‘கேள்' என்பதே முதல்நிலை, இக் ‘கேள்' என்பதிலே கேளிர் என்பதன் சிறந்த பொருள் அடங்கிக் கிடக்கிறது. 'கேள்' என்று ஏவுகின்றது முதல்நிலை! எதைக் கேட்க ஏவுகின்றது! இன்பத்தைக் கேட்கவா? துன்பத்தைக் கேட்கவா? இன்பத்தைக் கேட்க எவரும் விரும்புவர்; துன்பத்தைக் கேட்பதற்குச் செவி சாய்ப்பவரே அரியர். ஆதலால் பிறர் கூறும் இன்பு துன்புகளைக் கேள் எனப் பொதுப்பொருள் தரும் எனினும், துன்பினைக் கேட்டலே ‘கேள்' என்பதன் ஏவற்பொருளாம். 'கேளும் கிளையும் கொட்டார்க்கில்' என்பதன்றோ முதுமொழி. 'கெட்டகாலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை என்பதன்றோ பெருங்கதை? "கேட்டிலும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல்” என்பதன்றோ வள்ளுவம்! ஒருவர் துயருற்றோ தொல்லையுற்றோ இழப்புற்றோ இழிப்புற்றோ வந்து தம் நிலைமையைச் சொல்லத் தவிக்கின்றார். அவர் அல்லலை மாற்றுவதும் மாற்றாததும் ஆய்வுக் குரியவே எனினும், அவர் சொல்வதைக் காது கொடுத்தாவது கேட்க வேண்டும் அன்றோ! அக் கேட்புத் தானே அதனைக் கூறுபவர்க்கு வாய்க்கும் முதல் ஆறுதல்! ஆதலால், அல்லல் பட்டு ஆற்றாது உரைப்பார் உரையைக் காது கொடுத்துக் கேட்பவர் எவரோ அவர் கேள்: கேளிர்; காது கொடுத்துக் கேளாதவர் எவரேயாயினும் அவர் கேளார்! (கேளிர் - உறவினர்; கேளார் உறவிலார்.

-

ஒட்டு உறவு, கொண்டோர் கொடுத்தோர் என்பார் கேளல்லர். அவரே ஆயினும் சரி, அவரல்லா அயலாரே ஆயினும் சரி, புண்பட்டு வந்தவர் புகல்வுக்குக் காது கொடுத்துக் கேட்பவரே கேளிராம்.

காதுகொடுத்துக் கேட்டால் மட்டும் போதுமா? என வினாவுவார் உளர் எனின், காது கொடுத்துக் கேட்கவும் மாட்டாதவர் தாமா, ஓடி வந்து கை கொடுத்து உதவுவார் என மறுவினா வினாவுக!